இன்று மாலை கம்பன் பிறந்த ஊரான தேரழுந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆமருவிப் பெருமாளை சேவித்து விட்டு வந்தேன்.
Sunday, 28 February 2021
குரு வணக்கம்
இன்று மாலை கம்பன் பிறந்த ஊரான தேரழுந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆமருவிப் பெருமாளை சேவித்து விட்டு வந்தேன்.
விடை கொடுத்த படலம்
சிவிகையின் இராமன் இருத்தல்
10497. பூமகட்கு அணி அது என்னப்
பொலி பசும்பூரி சேர்த்தி,
மாமணித் தூணின் செய்த
மண்டபம் அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகை மீதே,
கொண்டலும் மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும்
தயரத ராமன் சார்ந்தான்.
10498. விரிகடல் நடுவண் பூத்த
மின் என ஆரம் வீங்க,
எரிகதிர்க் கடவுள் தன்னை
இனமணி மகுடம் ஏய்ப்பக்
கருமுகிற்கு அரசு செந்தாமரைமலர்க்
காடு பூத்து, ஓர்
அரியணைப் பொலிந்தது என்ன,
இருந்தனன் அயோத்தி வேந்தன்.
இராமனுக்குக் கவரி வீசுதல்
10499. மரகதச் சயில மீது
வான் நிலாப் பாய்வது என்ன
இருகுழை இடறும் வேற்கண்,
இளமுலை, இளநலார்தம்
கரகமலங்கள் பூத்த
கற்றை அம் கவரி தறெ்ற,
உரகரும், நரரும், வானத்து
உம்பரும், பரவி ஏத்த.
வெண்குடை நிழற்றும் காட்சி
10500. .உலகம் ஈர் ஏழும் தன்ன
ஒளிநிலாப் பரப்ப வானில்
விலகி நின்று ஒளிரும் திங்கள்
வெட்கி உள் கருப்புக் கொள்ள,
கலக வாள் நிருதர் கோனைக்
கட்டு அழித்திட்ட கீர்த்தி
இலகிமேல் நிவந்தது என்ன
எழு தனிக் குடை நிழற்ற.
வாத்தியங்கள் முழங்க மகளிர் நடம்புரிதல்
10501. மங்கல கீதம்பாட,
மறையவர் ஆசி கூற,
சங்கு இனம் குமுற, பாண்டில்
தண்ணுமை துவைப்ப, தா இல்
பொங்கு பல் இயங்கள் ஆர்ப்ப,
பொரும் கயல் கருங்கண், செவ்வாய்,
பங்கய முகத்தினார் கள்
மயில்நடம் பயில மாதோ.
மன்னர்கள் அடிபணிதல்
10502. திரைகடல் கதிரும் நாணச்
செழுமணி மகுட கோடி
கரைதரெிவு இலாத சோதிக்
கதிர் ஒளி பரப்ப, நாளும்
வரைபொரு மாட வாயில்
நெருக்குற வந்து, மன்னர்
பரசியே வணங்கும் தோறும்
பதயுகம் சேப்ப மன்னோ.
மந்திரக் கிழவர் முதலோர் சூழ இராமன் இருத்தல்
10503. மந்திரக் கிழவர் சுற்ற,
மறையவர் வழுத்தி ஏத்த,
தந்திரத் தலைவர் போற்ற,
தம்பியர் மருங்கு சூழ,
சிந்துரப் பவளச் செவ்வாய்த்
தரெிவையர் பலாண்டு கூற,
இந்திரற்கு உவமை ஏய்ப்ப
எம்பிரான் இருந்த காலை.
வானர வீரர்கேளாடு சுக்கிரீவன் வந்து வணங்குதல்
(10503-10504)
10504. மயிந்தன், மா துமிந்தன், கும்பன்,
அங்கதன், அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக் கண்ணன்,
சதவலி, குமுதன், தண்தார்
நயம்தரெி ததிமுகன், கோகச
முகன், முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்து ஏழு
கோடியாம் வீரரோடும்.
வீடணன் வந்து வணங்குதல்
10505. .ஏனையர் பிறரும் சுற்ற,
எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன்
வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந்தார்
வீடணக் குரிசில் செய்ய
மான வாள் அரக்கரோடும்
வந்து, அடிவணங்கிச் சூழ்ந்தான்.
குகன் வந்து வணங்குதல்
10506. .வெற்றி வெஞ் சேனையோடும்,
வெறிப் பொறிப் புலியின் வெவ்வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும்
அரையினன், சுழலும் கண்ணன்,
கல்திரள் வயிரத் திண்தோள்
கடுந்திறல் மடங்கல் அன்னான்,
எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு
இறை, குகன், தொழுது சூழ்ந்தான்.
வந்தவர்களை வள்ளல் இனிதிருக்கச் செய்தல்
10507. .வள்ளலும் அவர்கள் தம்மேல்
வரம்பின்றி வளர்ந்த காதல்
உள்ளுறப் பிணித்த செய்கை
ஒளிமுகக் கமலம் காட்ட,
அள்ளுறத் தழுவினான் போல்
அகம் மகிழ்ந்து, இனிதின், நோக்கி,
‘எள்ளல் இல்லாத மொய்ம்பீர்!
ஈண்டு இனிது இருத்திர் ‘என்றான்.
அறிஞர் முதலிய பல்லோரும் இராமனைச் சுற்றியமர்தல்
10508. நல்நெறி அறிவு சான்றோர்,
நான்மறைக் கிழவர், மற்றைச்
சொல்நெறி அறியும் நீரார்,
தோம் அறு புலமைச் செல்வர்,
பல்நெறி தோறும் தோன்றும்
பருணிதர், பண்பின் கேளிர்,
மன்னவர்க்கு அரசன் பாங்கர்,
மரபினால் சுற்ற மன்னோ.
அரசரும் பிறரும் இராமனோடு இருதிங்களை மகிழ்ச்சியாகக் கழித்தல்
10509. தேம்படு படப்பை மூதூர்த்
திருநகர் அயோத்தி சேர்ந்த
பாம்பு அணை அமலன் தன்னைப்
பழிச்சொடும் வணக்கம் பேணி
வாம்புனல் பரவை ஞாலத்து
அரசரும் மற்று உேளாரும்
ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின்,
இருமதி இறந்தது அன்றே.
கவிக்கூற்று
10510. .நெருக்கிய அமரர் எல்லாம்
நெடுங்கடற்கு இடைநின்று ஏத்த,
பொருக்கென அயோத்தி எய்தி,
மற்றவர் பொருமல் தீர,
வருக்கமோடு அரக்கர் யாரும்
மடிதர, வரிவில் கொண்ட
திருக்கிளர் மார்பினான் பின்
செய்தது செப்பல் உற்றாம்.
10511. .மறையவர் தங்கட்கு எல்லாம்
மணியொடு முத்தும், பொன்னும்,
நிறைவளம் பெருகு பூவும்,
சுரபியும் நிறைத்து, மேல்மேல்,
குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம்
குறைவு அறக் கொடுத்து, பின்னர்,
அறைகழல் அரசர் தம்மை
‘வருக ‘என அருள, வந்தார்.
10512. .அய்யனும் அவர்கள் தம்மை
அகம்மகிழ்ந்து, அருளின் நோக்கி
வய்யகம், சிவிகை, தொங்கல்,
மாமணி மகுடம், பொன்பூண்,
கொய் உளைப் புரவி, திண்தேர்
குஞ்சரம் ஆடை இன்ன
மெயுறக் கொடுத்த பின்னர்
கொடுத்தனன் விடையும் மன்னோ.
சுக்கிரீவனுக்கு இராமன் பரிசுகள் கொடுத்தல்
10513. சம்பரன் தன்னை வென்று
தயரதன் நின்ற காலத்து
உம்பர்தம் பெருமான் ஈந்த
ஒளிமணிக் கடகத்தோடும்
கொம்புடை மலையும் தேரும்,
குரகதக் குழுவும் தூசும்
அம்பரம் தன்னை நீத்தான்
அலரி காதலனுக்கு ஈந்தான்.
10514. .அங்கதம் இலாத கொற்றத்து
அண்ணலும், அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம்
அழகுறத் திருத்துமாபோல்,
அங்கதம் கன்னல் தோளாற்கு
அயன் கொடுத்த அதனை ஈந்தான்,
அங்கதன் பெருமை மண்மேல்
ஆர் அறிந்து அறைய கிற்பார்.
10515. பின்னரும் அவனுக்கும் ஐயன்
பெருவிலை ஆரத்தோடும்
மன்னும் நுண்தூசும், மாவும்,
மதமலைக் குழுவும், ஈயா,
‘உன்னை நீ அன்றி, இந்த
உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக கதிரோன் மைந்தன்
தன்னொடும் மருவி ‘என்றான்.
அனுமனுக்குப் பரிசளித்தல் (10515-10517)
10516. மாருதி தன்னை ஐயன்
மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார்,
நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான்செய்
செயல் பிறிது இல்லை; பைம்பூண்
போர் உதவிய திண்தோளால்
பொருந்துறப் புல்லுக ‘என்றான்.
10517. .என்றலும், வணங்கி நாணி,
வாய் புதைத்து, இலங்கு தானை
முன்தலை ஒதுக்கி நின்ற
மொய்ம்பனை முழுதும் நோக்கி
பொன்திணி வயிரப் பைம்பூண்
ஆரமும், புனைமென் தூசும்
வன்திறல் கயமும், மாவும்,
வழங்கினன், வழங்கு சீரான்.
10518. .பூமலர்த் தவிசை நீத்து,
பொன் மதில் மிதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன்
திருவருள் முகந்து நோக்க,
பாமறைக் கிழத்தி ஈந்த
பருமுத்த மாலை கைக்கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அன்னாள்
இடர் அறிந்து உதவினாற்கே.
சாம்பவனுக்குப் பரிசளித்தல்
10519. சந்திரற்கு உவமை சான்ற,
தாரகைக் குழுவை வென்ற
இந்திரற்கு ஏய்ந்ததாகும்
என்னும் முத்தாரத்தோடு
கந்து அடு களிறு, வாசி,
தூசு, அணிகலன்கள் மற்றும்
உந்தினன், எண்கின், வேந்தற்கு
உலகம் முந்து உதவினானே.
நீலனுக்குப் பரிசு
10520. நவமணிக் காழும், முத்து
மாலையும், நலம்கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொற்பூண்
உலப்பு இல பிறவும், ஒண்தார்க்
கவனவெம் பரியும், வேகக்
கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன்
பயந்தடெுத்தவனுக்கு ஈந்தான்.
சதவலிக்குப் பரிசு
10521. .பதவலிச் சதங்கைப் பைந்தார்ப்
பாய்பரி, பணைத்திண் கோட்டு
மதவலிச் சைலம், பொன்பூண்,
மாமணிக் கோவை, மற்றும்
உதவலின் தகைவ அன்றி,
இல்லன உள்ள எல்லாம்
சதவலி தனக்குத் தந்தான்
சதுமுகத்தவனைத் தந்தான்.
கேசரிக்குப் பரிசு
10522. பேச அரிது ஒருவர்க்கேயும்
பெருவிலை இதனுக்கு; ஈதுக்
கோ, சரி இலது என்று எண்ணும்
ஒளிமணிப் பூணும் தூசும்,
மூசு எரிக்கு உவமை வெம்மை
மும்மதக் களிறும், மாவும்,
கேசரி தனக்குத் தந்தான்
கிளர்மணி முழவுத் தோளான்.
நளன் முதலியோர்க்குப் பரிசு
10523. .வளன் அணிகலனும், தூசும்,
மாமதக் களிறும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன்,
நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம்
உலப்பு இல பிறவும் ஈந்தான்
குளன் அமர் கமல வேலிக்
கோசலக் காவலோனே.
எழுபது வெள்ளம் சேனைக்கும்
கருணை நோக்களித்தல்
10524. அவ்வகை அறுபத்து ஏழு
கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ்வகைத் திறனும் நல்கி,
இனியன பிறவும் கூறி,
பவ்வம் ஒத்து உலகில் பல்கும்
எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழக்
கொடுத்தனன் கருணை நோக்கம்.
வீடணனுக்குப் பரிசு (10524-10525)
10525. மின்னை ஏய் மௌலிச் செம் கண்
வீடணப் புலவர் கோமான்
தன்னையே இனிது நோக்கி,
‘சராசரம் சுமந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை
அலது இலர்; உளரேல், ஐய!
பொன்னையே இரும்பு நேரே
பொருவென ஒக்கும் என்றான்.
10526. என்று உரைத்து, அமரர் ஈந்த
எரிமணிக் கடகத்தோடு
வன்திறல் களிறும், தேரும்,
வாசியும், மணிப்பொன் பூணும்,
பொன்திணி தூசும், வாசக்
கலவையும், புதுமென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான்
நாகணைத் துயிலில் தீர்ந்தான்.
10527. சிருங்கபேரம் அது என்று ஓதும் செழுநகர்க்கு இறையை நோக்கி,
‘மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு? ‘என்னா,
கருங் கைம்மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ.
10528. .அனுமனை, வாலி சேயை, சாம்பனை, அருக்கன் தந்த
கனைகழல் காலினானை, கருணையங் கடலும் நோக்கி,
‘நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் வைப்பும்
எனது அது காவற்கு இன்று என் ஏவலின் ஏகும் ‘என்றான்.
10529. .இலங்கை வேந்தனுக்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நாடுறு நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், ‘ஏய செய்தல் கடன் ‘எனக் கருதிச் சூழ்ந்தார்.
10530. .பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்
விரத மாதவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,
வரதனை வலங்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே,
சரதமா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார்.
10531. குகனைத்தன் பதியின் உய்த்து, குன்றினை வலம்செய் தேரோன்
மகனைத் தன்புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே எய்தி கனைகடல் இலங்கை புக்கான்
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே.
10532. .அய்யனும் அவரை நீக்கி, அருள்செறி துணைவரோடும்
வய்யகம் முழுதும் செங்கோல் மனுநெறி முறையில் செல்ல,
செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்
நய்யுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே.
10533. உம்பரோடு இம்பர் காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
‘எம் பெருமான் ‘என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய,
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான்
அம்பரந்து அனந்தர் நீக்கி அயோத்தியில் வந்த வள்ளல்
10534. .இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே.