Sunday 28 February 2021

குரு வணக்கம்


இன்று மாலை கம்பன் பிறந்த  ஊரான தேரழுந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆமருவிப் பெருமாளை சேவித்து விட்டு வந்தேன். 

இன்று மதியம், கம்ப ராமாயணம் குறித்து எனது வலைப்பூவில் எழுதி வரும் ‘’யானை பிழைத்தவேல்’’ தொடரை நிறைவு செய்தேன். ஒரு பேராசானுக்கு எளிய - மிக எளிய மாணவன் செலுத்தும் ஒரு வணக்கம். 

எழுதி நிறைவு செய்ததும் கம்பன் வாழ்ந்த மண்ணிற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. அவரது பாதம் பட்ட பூமியில் இருக்க வேண்டும் என்று. எல்லாம் ஆசான்களால் உண்டாக்கப்பட்டதே. அதை அவ்வப்போது நாம் உணர்கிறோம். 

கம்ப ராமாயணத்தை மீண்டும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. மீண்டும் மாணவனாக கம்பன் முன் அமரும் ஒரு சந்தர்ப்பம். 

யாமறிந்த புலவரிலே , கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் என்பது பாரதி சொல். கம்பன் குறித்து ‘’யானை பிழைத்தவேல்’’ நிறைவாகி உள்ளது. திருக்குறள் குறித்து ‘’ஆசான் சொல்’’ என்ற பெயரில் எழுதியுள்ளேன். இந்த தருணத்தில் சிலப்பதிகாரம் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஈஸ்வர ஹிதம். 

ராம் ராம்