நேற்று நிகழ்ந்த ஒரு பயணத்தின் விளைவாக ஒரு யோசனை உதித்தது. அவ்வாறு யோசனைகள் உருவாவது நலம் பயப்பது என்பதே என் எண்ணம். அனைத்து யோசனைகளும் அப்படியே செயலாகி விட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒரு யோசனை பலரின் மனத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. இன்றில்லா விட்டால் என்றோ ஒரு நாள் நமக்கில்லா விட்டால் வேறு யாருக்கோ எந்த யோசனையும் பயன் தரலாம்.