Friday, 26 June 2020

சொல்

நீ
யார்
என
அனைவரும் கேட்கிறார்கள்

உனது ஆதி இருப்பை
யாவற்றையும் பொலியச் செய்யும்
நின் கருணையை
தீயெனப் படர்ந்து எழும் உற்சாகத்தை
எல்லா உயிர் மேலும் கவியும் கனிவை
அலாதியான மௌனத்தை
தனித்துவமான தவத்தை
காண்பவற்றை துலங்கச் செய்யும் ஒளியை

கூறாமல்

உன் பெயர் மட்டும் கூற முடியுமா