விரிந்த வானின் கீழ்
கருக்கிருட்டில்
ஆர்ப்பரிக்கும்
அலைகடல் முன் நிற்கிறேன்
உப்புக்காற்று
நிறைகிறது
சுவாசம் முழுமையும்
பரவத் துவங்குகிறது மென் சிவப்பு
ஒளியும்
வானும்
காற்றும்
தொட்டுக் கொண்டிருக்கும்
பிரதேசத்திற்கு
ஆழங்களில்
மூழ்கி
அமிழ்ந்து
கரைந்து
வந்து சேர்ந்து விட
முனைகிறேன்
கணந்தோறும் உதிப்பது
ஒளியின்
நூதனப் பிராந்தியம்
ஏனென்று
அறியாமல்
ஒரு துளி கண்ணீர்
சிந்துகையில்
உச்சியிலிருந்து கொட்டியது
வான் ஆற்றின்
முதல் துளி