Friday, 18 September 2020

 வெயிலில் காயும் புழு
வேதனை உணர்கிறேன்
பரந்த வானின் கீழ்
பெருகிக் கொண்டே செல்கின்றன
பிரிவின் நாட்கள்
ஒவ்வொரு மூச்சும்
நீளச் செய்கிறது
பிரிவின் தூரத்தை
அருகிருந்தது
அமிர்தம்
என் துயரம் அதுவல்ல
என் கண்ணீர்
எதற்கானதும் அல்ல
என்றோ ஒரு நாள்
ஏதோ ஒரு பொழுதில்
ஒளி
பொன் உரு கொள்கையில்
நான்
ஒளியாகாதது
எதனால்?