Tuesday, 5 January 2021

இனிது

காலையின்
முகத்தைத் தொடும்
முதல் கதிரொளி
தேயிலை கொதிக்கும்
அடுப்பின்
நீல வண்ணத் தீ
சாலையைக் கடந்து கொண்டிருக்கையில்
எங்கிருந்தோ
பிரதிபலிக்கும்
கண்ணாடித் துண்டின்
சிறு வெளிச்சக் கூறு
உன்னை நினைவு கூர்வது
இனிதானது
உனது நினைவுகளைப் போல
உன்னைப் போல