Sunday, 28 February 2021

சேது புகழ்

10262.   .நன்னுதல் நின்னை நீங்கி நாள் பல கழிந்த பின்றை,

மன்னவன் இரவி மைந்தன் வான் துணை ஆக நட்ட

பின்னைமாருதி வந்து உன்னைப் பேது அறுத்துஉனது பெற்றி

சொன்னபின்வானரேசர் தொகுத்தது இச்சேது கண்டாய்.

 

 

10265.   .கங்கையோடுயமுனைகோதாவிரியொடு களிந்தை சூழ்ந்த

பொங்குநீர் நதிகள் யாவும்படிந்து அலால்புன்மை போகா;

சங்கு எறி தரங்க வேலை  தட்ட இச் சேது என்னும்

இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே.

 

10268.   .‘நெற்றியின் அழலும் செங்கண் நீறு அணி கடவுள் நீடு

கற்றை அம் சடையின் மேவும் கங்கையும், “சேது ஆகப்

பெற்றிலம் ‘‘ என்று கொண்டு பெருந் தவம் புரிகின்றாளால்;

மற்று இதன்தூய்மை எவ்வாறு உரைப்பதுமலர்க்கண் வந்தாய்