10156. கற்பினுக்கு அரசினை பெண்மைக் காப்பினை
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை
தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை
அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்.
10174. இளையவன் தனை அழைத்து ‘இடுதி தீ ‘என
வளை ஒலி முன்கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ அவன் கண்ணின் கூறினான்.
10175. ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்
ஆங்கு எரி விதிமுறை அமைவித்தான்; அதன்
பாங்குற நடந்தனள் பதுமப் போதினாள்.
10180. கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,
மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்,
சினத்தினால் சுடுதியால், ‘தீச்செல்வா! ‘என்றாள்;
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்.
10181. நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும் பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி அவள் கற்பின் தீயினால்.