வணக்கம் நண்ப!
நலமா
எனது பெயர் தயானந்தா. லண்டனில் இருக்கும் இலங்கைத் தமிழன்.உங்கள் ராமாயாணத் தேடலின் ரசிகன். ஓர் ஒலிபரப்பாளன், இலங்கை வானொலியிலும் பின்னாட்களில் பிபிசி இலும் பணியாற்றி இப்போது (60 வயதை எட்டுகிறேன்) பழைய பதிவுகளை எண்ணிமப் படுத்துகிறேன். 40 பாகங்களாக இலங்கை வானொலியில் ஒலிபரப்பான எனது ராம நாடகத்தை மீளக்கேட்கவும் பிரதிகளை பதிவிடும் பணியிலும் ஈடுபடுகிறேன். இணையத்தை சுற்றியபோது உங்கள் எழுத்துகளை பார்த்து ரசித்தேன்,தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உங்கள் இலக்கத்தை அனுப்பவும்.
எனது இலக்கம் ------------
என்றும் அன்புடன்
இளையதம்பி தயானந்தா