இன்று காலை அஞ்சல்துறை மேலதிகாரியிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. 19ம் தேதி சி.பி.கி.ராம்.ஸ் ல் பதிவு செய்த புகார் தொடர்பான கடிதம். நேற்று என்னை அலைபேசியில் அழைத்துப் பேசிய விபரத்தை தளத்தில் பதிவு செய்திருந்தேன். இன்று எனக்கு வந்த பதிலின் தமிழாக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.
***
அனுப்புநர்
*****
*****
மயிலாடுதுறை
பெறுநர்
ர. பிரபு
*****
*****
மயிலாடுதுறை
ஐயா,
பொருள் : சி.பி.கி.ராம்.ஸ் புகார் எண் : *****
மின்னணு பண பரிமாற்ற விண்ணப்ப ஒப்புகைச் சீட்டு தொடர்பாக தாங்கள் அளித்த புகார் தொடர்பாக ஒரு விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் தன் விசாரணையைத் தொடங்கியுள்ளார். பிழை புரிந்த அலுவலர்கள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள விசாரணை அதிகாரி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார், அவரது நடவடிக்கை குறித்து தங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
தங்களுக்கு நேர்ந்த சேவைக் குறைபாடுக்கு வருந்துகிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
(ஒப்பம்)
நகல் :
போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்
செண்ட்ரல் ரீஜன் (தமிழ்நாடு வட்டம்)
திருச்சிராப்பள்ளி