அமைப்பாளருக்கு ஒரு நண்பர் இருக்கிறார். வயது முதிர்ந்தவர். நாளிதழ் ஒன்றில் வெளியான விளம்பரத்தைக் கண்டு விவசாய முதலமைச்சர், சத்திய சோதனை, ஜவஹர்லால் நேரு சுயசரிதம், காமராஜர் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களின் தொகுப்பை ஆர்டர் செய்து அந்த நூல்கள் அவரது வீட்டில் இருந்தன. அங்கே சென்றிருந்த அமைப்பாளர் அவற்றை எடுத்துப் பார்த்தார்.
அமைப்பாளர் சமீபத்தில் இணையத்தில் ஓமந்தூர் பெரியவளைவு ராமசாமி ரெட்டியார் குறித்து சோமலெ எழுதிய ‘’விவசாய முதலமைச்சர்’’ நூலை வாசித்து விட்டு அது குறித்து வலைப்பூவில் எழுதியிருந்தார்.
நேருவின் சுயசரிதம் நூல் அமைப்பாளரைக் கவர்ந்தது. அந்த நூல் இரண்டு பாகங்களாக 870 பக்கம் கொண்டது. நண்பரிடம் கூறி விட்டு அதன் முதல் பாகத்தை வாசிக்க வீட்டுக்குக் கொண்டு வந்தார். இரண்டு நாட்களில் முதல் பாகத்தை வாசித்தார். அதனை எடுத்துச் சென்று நண்பரிடம் கொடுத்து விட்டு இரண்டாம் பாகத்தை எடுத்து வந்தார். அதனை வாசிக்கத் தொடங்கி இப்போது இன்னும் 50 பக்கங்களே அதனை நிறைவு செய்ய உள்ளன.
நண்பர் ஏதேனும் ஒரு நூலை வாசிக்கக் கையில் எடுத்து விட்டாரா என்பது தெரியவில்லை.