கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
சிறுமகவாய் கையளவே இருந்தாய்
உன் கண்கள் ஒளிர்ந்தன
தீச்சுடர் என
தீக்கதிர் என
ஒளிரும் உன் கண்களில்
நிரம்பி வழிகிறது அருள் கிருஷ்ணா
நதியெனப் பெருக்கெடுக்கிறது
உன் கண்களின் அருள்
அந்நதியில் மூழ்குகிறேன்
அந்நதியில் கரைகிறேன்
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
என் மீட்பே