Wednesday, 9 July 2025

14 மரங்கள் - 4 ஆண்டுகள்

சில நாட்களுக்கு முன்னால், 14 மரங்கள் வெட்டப்பட்ட ஊரின் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவுக்குச் சென்றிருந்தேன். அந்த ஊரைக் கடந்து செல்லும் போது எப்போதும் அந்தத் தெருவுக்கு சென்று வெட்டப்பட்ட மரங்களுக்கு பிழையீடாக நடப்பட்ட மரங்களைக் காண்பது எனது வழக்கம். இந்த நான்கு ஆண்டுகளில் அவை பெரிய மரங்களாகி விட்டன. அவற்றில் நிழல் தரும் மரங்கள் உண்டு ; பூ மரங்கள் உண்டு ; கனி தரும் மரங்களும் உண்டு. நான்கு கோடைக்காலங்களைக் கடந்து வந்திருக்கின்றன அந்த மரங்கள். இன்னும் ஓரிரு மாதத்தில் பிரதேசத்தின் மழைக்காலம் துவங்க இருக்கிறது. மழைக்காலம் 100 தினங்கள் இருக்கும். அந்த காலகட்டத்தில் அந்த மரங்கள் மேலும் பெருவளர்ச்சி பெறும். தன்னை வெட்ட வருபவர்களுக்கும் நிழல் அளிக்கும் மரங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு மனிதனுக்கு எத்தனையோ இருக்கிறது.