Thursday 29 August 2019

ஆயிரம் மழைத்துளிகள்

இன்று மாலை அந்திக்குப் பின், இங்கே நல்ல மழை பெய்தது. ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு வீட்டு மாடிக்குச் சென்று மழையில் நனைந்தேன். மழைத்துளிகள் உடலை நனைத்துக் கொண்டிருந்தன. மழைத்துளிகள் உடலைக் கரைத்துக் கொண்டிருந்தன. இரண்டு கைகளும் விரிய உளம் பொங்கி இருக்க உயர்ந்த சிரசுடன் வானத்தைப் பார்த்தேன். அக்கணம் மின்னிய மின்னலில் ஆயிரம் மழைத்துளிகளைக் கண்டேன். இந்த வாழ்க்கை இனிமையானது. வானம் நாளும் வழங்கும் எல்லையற்ற ஆசியைக் கொண்டது. இந்த மண்ணில் இனிமை இல்லாத ஒன்று இருக்கிறதா என்ன? மழையில் நனையும் சில நிமிடங்கள் வாழ்க்கை குறித்த பெரும் நம்பிக்கைகளைத் தரும் எனில் இந்த மண் சொர்க்கமன்றி வேறென்ன? நாம் சொர்க்கத்தில் வாழாமல் வேறெங்கே வாழ்கிறோம்?