Saturday, 5 October 2019

நிறைவு

இன்று நவராத்திரி விரதத்தின் ஏழாவது நாள்.

இன்று காலையிலிருந்து சோர்வாக உணர்ந்தேன். ஆறு நாட்களாக எந்த திட உணவும் திரவ உணவும் உண்ணவில்லை. தண்ணீர் மட்டுமே அருந்தினேன். வீட்டில் அனைவரும் உணவு உண்ணுமாறு வற்புறுத்தினர். உறவினர்களும் நண்பர்களும் கேட்டுக் கொண்டனர். ஆகையால் ஒன்பது நாட்கள் விரதத்தை ஏழாவது நாளில் நிறைவு செய்து கொண்டேன். 

இந்த ஏழு நாட்கள் எனக்கு உடல் குறித்தும் ஆரோக்கியம் குறித்தும் வாழ்க்கை குறித்தும் போதித்தவை அதிகம். இந்த ஏழு நாளில் என்னுடைய எடை 7 கிலோ குறைந்துள்ளது. உடல் எடை குறைந்திருப்பது இலகுவாக உணர வைக்கிறது. மனித உடல் அற்புதமானது. அது முறையாகப் பயன்படுத்தப்படுமானால் வாழ்வின் மேலான நிலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடியது. 

புத்தர் தனது பாதைக்கு ‘’மத்திம மார்க்கம்’’ என்று பெயரிட்டார். உடலின் இயல்புகளை வளர்க்காத உடலின் இயல்புகளைப் புறக்கணிக்காத மையமான ஒரு பாதை இருப்பதாக புத்தர் கூறினார். 

இந்த விரதம் எனது வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வதற்கான சில வழிகாட்டல்களை அளித்துள்ளது. விஜயதசமியிலிருந்து அவற்றைப் பின்பற்றலாம் என இருக்கிறேன்.

1. காலை 4 மணிக்கு எழுதல்

2. நல்லெண்ணெயை வாயில் 10 நிமிடங்கள் வைத்திருந்து வாய் கொப்பளித்தல்.

3. ஐந்து கிலோமீட்டர் நடைப்பயிற்சி

4. சூர்ய நமஸ்காரம் பயிற்சி செய்தல்

5. யோகா 

6. மதிய உறக்கத்தைத் தவிர்த்தல்

7. தினமும் 3 மணி நேரம் புத்தக வாசிப்பு

எனக்குச் சொந்தமான இடத்தில் ஒரு அபார்ட்மெண்ட் கட்ட உள்ளேன். அதற்கான திட்டமிடல்களிலும் ஆயத்தங்களிலும் உள்ளேன். மனம் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறது.