ஜனவரி 14 அன்று காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு. அப்போது, திருமதி. ஷமிமா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்பெண் வசிக்கும் கிராமத்தின் மண்ணும் சாலைகளும் நான்கடி உயரத்துக்கு பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தது. எந்த மோட்டார்வாகனமும் அதில் செல்ல இயலாது என்ற நிலைமை. அந்நிலையில் அப்பெண்ணை ஸ்ட்ரெச்சரில் தூக்கியவாறு இந்திய ராணுவத்தின் நூறு ஜவான்களும் அந்த கிராமத்தின் 40 பொது மக்களும் நான்கு மணிநேரம் நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கே குழந்தை பிறந்துள்ளது.