Tuesday 30 June 2020

ஒரு கண்டடைதல்

இன்று காலை ஃபிளாட் டி.வி பெரிய திரையைப் பார்த்து மருத்துவ மாணவரிடம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து அதைப் பற்றிய எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அலைபேசியுடன் இணைக்கக்கூடிய ஒரு கையடக்கமான விலை குறைவான ஒரு புரொஜக்டர் இருக்குமானால் அதன் மூலம் செய்தித்தாளை இ-பேப்பராக வீட்டுச் சுவரில் எவ்வளவு தேவையோ அவ்வளவு பெரிதுபடுத்தி பார்க்க முடியுமே என்று யோசித்தேன். அலைபேசி மிகச் சிறியது. அதன் சிறிய திரை வாசிப்புக்கு உகந்தது இல்லை. கண்களுக்கும் கடினமான வேலை. ஆனால் சுவரில் இருப்பதை தேவையான ஃபாண்ட் சைஸில் அமைத்து வாசிக்க முடியும் என்று தோன்றியது. எனக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்குவதில் என்றுமே பெரிய ஆர்வம் இருந்ததில்லை. என் மனதில் உதித்தது சந்தையில் விற்பனையாக வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்குமே என்ற ஐயத்துடன் இணையத்தில் தேடினேன். மிக மிகக் குறைந்த விலையில் ஒரு மினி புரொஜக்டர் உலகெங்கும் விற்பனையாகிறது. அலைபேசியிலிருந்தோ கணிணியிலிருந்தோ மடிக் கணிணியிலிருந்தோ வீட்டுச்சுவரில் புரொஜக்ட் செய்ய முடியும். பகல் வெளிச்சத்திலியே தெளிவாகக் காணும் எல்.இ.டி வசதி உள்ளது. ஒரு சுவரொட்டியை வாசிப்பது போல ஒரு செய்தித்தாளை வாசித்து விடலாம். யுரேகா! யுரேகா! யுரேகா!