ஒளிரும் நிலவு
பாதை காட்டும் ஒளி, உலகினுக்கு
வெற்றிடம் நிரப்பும் மிளிர்வு
பனி மூடியிருக்கையில் புன்னகைக்கிறது
சிலர் நினைக்கிறார்கள்
அது வளர்வதாக
தேய்வதாக
என் நிலவுக்கு
இரவும் பகலும் இல்லை
முத்தென ஒளி வீசுகிறது
எப்போதும்
-ஒரு ஜென் கவிதை