உனக்கு நினைவிருக்கிறதா?
கரம் கோர்த்து கடல்மணலில் மூச்சிறைக்க
நாம் வெகுதூரம் ஓடினோம்
உனக்கு
ஒரு நெல்லிக்கனி ஒன்றைத் தந்தேன்
வீட்டுப்பாடம் எழுதாதற்காக
நான் வகுப்பில் நிற்க வைக்கப்பட்ட போது
நீ
பொங்கி பொங்கி அழுதாய்
எனக்காக பல இடங்களில் நீ பேசினாய்
நான் பெற்ற பரிசுகளுக்கு நீ மகிழ்ந்தாய்
உன் வாட்டர் பாட்டிலில்
நீ
நீர் அருந்தாமல் வைத்திருந்து
வேண்டுமா வேண்டுமா
எனக் கேட்டு
எப்போதும் தந்தாய்
உனக்கு நினைவிருக்கிறதா?
கரம் கோர்த்து கடல்மணலில்
மூச்சிறைக்க
நாம் வெகுதூரம் ஓடினோம்