Monday, 5 October 2020

நட்பு

இருப்புப் பாதையை
ஒட்டிய
மைதானத்தில்
பந்து விளையாடும்
எப்போதும்
ரயில்களுக்குக் கையசைக்கும்
சிறுவனுக்கு
ரயில்கள்
ஒன்று இரண்டு
பல
நட்பார்ந்த கையசைவுகளாக
இருக்கிறது