Wednesday, 7 October 2020

ஜனனம்

முடிவில்லாத மலைத் தொடர்
உருகி உருகி
கரையும் 
விண் மேகங்கள்
செம்மண் குழம்பாய்
நதி
நடுவே ஒரு பாறை
அனாதி காலமாய்
காத்திருக்கும் ஒரு பட்சி
நித்தம்
எழுகிறது
அந்திச் சுடர்கள்