ஊழிக்காலமாய் உருண்டோடும் ஒரு மகாநதி
நீரில் அமிழ்ந்திருக்கும் கூழாங்கற்கள்
அந்தியில்
ஈரம் மிக்க காற்று ஓயாமல் வீசுகிறது
ஒரு சிறு கல்மண்டபம்
அதன் மாடங்களில் சின்னஞ்சிறு தீச்சுடர்கள்
அசையும் சுடரென நீ அமர்ந்திருக்கிறாய்
உனது வாத்தியத்தின் இசை காற்றில் அலை மோதுகிறது
ஆத்ம தவிப்பு
செவிகளின் வழியே
நெஞ்சங்களில் நிறைகிறது
இசை
நெஞ்சங்களின் வழியே
ஆத்மா
கரையும் அகத்தின் சங்கீதம்
உன் சங்கீதத்துடன்
ஒத்திசைகிறது
விடுதலைக்கான பாதை
தொடங்குகிறது
மண்ணிலிருந்து