கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை (765)
அறத்துக்கு அரணாக அமையும் படை, வாழ்க்கையின் மேலான தன்மைகளைக் குறித்த புரிதல் கொண்டது. என்றுமுளது அறம் என அறிந்தது. அறத்தின் பகுதியாகத் தன்னை உணர்வது. உடலின் மனத்தின் எல்லைகளைத் தாண்டும் பயிற்சி உடையது. ஆகச் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டது.
அத்தகைய படை, போரில் ‘’மரணத்துக்கே வாய்ப்பு’’ என்ற நிலை வந்தாலும் தனது ஒருங்கிணைப்பில் எள்ளளவும் பிசகாது; ஓருடலெனத் திரண்டு எதிரிகளை எதிர்க்கும். அத்தகைய அறத்தின் ஆற்றலே படைத்திறனாகும்.