Sunday, 20 December 2020

தன்மை

 இறைவா
கருணைப் பார்வைகளே
அன்பின் சொற்களே
மாசற்ற ஸ்பரிசங்களே
பிறருக்காக 
முடிவற்ற பாதைகளை
நடந்து கடந்த பாதங்களே
உங்கள் முன்
ஈசல் ஒன்று துடிக்கிறது
சிறு எறும்பு 
தன் புற்றுக்குள் செல்கிறது
தன் உணவைச் சுமந்தவாறு
முகம் பார்க்கக் காத்திருக்கிறது
வாசலின் நாய்
பல கோடி நூறு 
தீபப் பிரகாசத்துடன்
ஒளிரத் தொடங்குகிறது
நாளின்
சூரியன்