Friday 1 January 2021

தன்னிறைவு

நாங்கள் வழக்கமாக ஒரு குளக்கரை வரை உலாவச் செல்வோம். அதன் கரையில் இருக்கும் அரசமரம் வரை. சமீபத்தில் பெய்த மழையில் குளம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. 

‘’அஞ்சாறு மாசமா கிராமத்துல வேலை பாத்திருக்கீங்க. என்விராண்மெண்ட் இல்லாம இன்னும் என்ன செய்ய முடியும்னு நினைக்கறீங்க?’’

‘’தம்பி! கிராமம் ஒரு ஸ்லீப்பிங் ஜெயிண்ட். கிராம மக்களுக்கு ஒரு சில விஷயங்களைப் புரிய வச்சோம்னா அவங்க பல விஷயம் செய்வாங்க’’

‘’பிரபு அண்ணா! நீங்க கடவுள்னு சொல்றீங்க. கோவில்னு சொல்றீங்க. ஆயிரம் வருஷம், சோழ அரசர்கள்... இப்படி போய்ட்டே இருக்கீங்க. நீங்க சொல்ற எல்லாமே பாஸ்ட் டென்ஸ். பிரசெண்ட் டென்ஸ்-ல கிராமம் நீங்க நினைக்கற மாதிரி இருக்கா?’’

‘’நான் சொல்றது பாஸ்ட் இல்ல. பிரசண்ட் கண்டினியுஸ். இப்பவும் ஒரு கிராமத்தை ஒருங்கிணைக்கிறது ஈ.ஸி. ரொம்ப ஈ.ஸி. கமிட்மெண்ட் இருந்தா போதும்.’’

‘’பிரபு அண்ணா! சோஷியல் ஆர்கனைசேஷன்ஸ் இருக்காங்க. பொலிட்டிக்கல் பார்ட்டிஸ் இருக்காங்க. அவங்க முழு நேரமும் இதே விஷயத்தைப் பத்தி யோசிப்பாங்க. செயல்படுவாங்க இல்லையா. அவங்களுக்கு உங்களுக்கு தோணுணதை விட இன்னும் நிறைய பெட்டர் ஐடியாஸ் தோணியிருக்காதா?’’

‘’குட் கொஸ்டின். பிளானிங்ல மேக்ரோ பிளானிங், மைக்ரோ பிளானிங்னு ரெண்டு வகை இருக்கு. ரெண்டுக்கும் அது அதோட பலம் உண்டு. லிமிட் உண்டு. நான் கிராமத்தை ஒரு சிம்பலா பாக்கறன். ஒரு கிராமத்துக்குச் சாத்தியம் ஆனது 100 கிராமத்துக்குச் சாத்தியம். ஒரு கிராமத்துல ஒர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸ் அடுத்த கிராமத்துக்குப் போகும் போது இன்னும் ஈஸியாகும். பிளானிங் எக்ஸிகியூஷன் அனைத்துமே லகுவா இருக்கும்.’’

‘’இந்த மாடல்-ல என்னென்ன விஷயம் செய்ய முடியும்?’’

‘’பல விஷயம் செய்ய முடியும். நான் சிலதை சொல்றன். மாதம் ரூ.1 மட்டும் கட்டுற மத்திய அரசாங்கத்தோட ஆக்ஸிடெண்டல் இன்ஸ்யூரன்ஸ் இருக்கு. மாதம் ரூ.25 மட்டும் பிரீமியம் கட்டுற லைஃப் இன்ஸ்யூரன்ஸ் இருக்கு. மாசம் குறிப்பிட்ட தொகை கட்டுற பென்ஷன் பிளான் இருக்கு. இந்த பிளான்ஸ் கிராமத்துல இருக்கறவங்களுக்கு நேரடியா பலன் தரக்கூடியது. அவங்க ரொம்ப மெனக்கெட வேண்டியது இல்லை. இப்ப பெரும்பாலான கிராம மக்களுக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கு. அவங்க எப்பவுமே ஜீரோ பேலன்ஸ் வச்சுக்கிறது இல்ல. அவங்க அக்கவுண்ட்ல பணம் இருக்கும். ஒரு கிராமம் முழுசுக்கும் இந்த அவர்னேஸ் கிரியேட் பண்ணா மக்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.’’

‘’நீங்க சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ... ‘’ என இழுத்தான் தம்பி.