உன்னைச் சுற்றி
மலர் வண்ணங்கள் சூழ்ந்து கொள்கின்றன
சுடர்ப் பிரகாசம் நிறைகிறது
தொலைதூர மணியோசையின்
நாத அலைகள் மிதக்கின்றன
கடலில்
அலைகள் அனைத்தையும் தொடும்
சந்திரனைக் கண்டிருக்கிறாயா
அதன் சிறு துளி
உன்னை
எப்போதும் தொடர்கிறது
கரையும் உள்ளம்
எங்கும்
காண்கிறது
இறைமையை