10102. மெய்கொள் வேத விதிமுறை விண் உேளார்
தயெ்வ நீள்புனல் ஆடல் திருத்திட
ஐயன் ஆணையினால் இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ.
இளஞ்சிங்கமான இலக்குவன் வீடணனுக்கு மறை முறைப்படி மகுடம் சூட்டினான்.
10105. முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை ஆண்டை அந்
நெடிய காதலினோற்கு உயர் நீர்மை செய்து
இடிகொள் சொல்லன் அவற்கு இது இயம்பினான்.
வீடணன் இலக்குவனை வணங்கினான்.
10110. இப்புறத்து இ(ன்)ன எய்துறு காலையில்
அப்புறத்தை உன்னி அனுமனை
‘துப்பு உறு அச் செய்யவாய் மணித்தோகைபால்
செப்புறு இப்படிப் போய் ‘எனச் செப்பினான்.
அரண்மனையில் நடந்த நிகழ்வுகளை அசோகவனத்தில் உள்ள
சீதையிடம் சென்று சொல்வாயாக என்று ஸ்ரீராமன் அனுமனை அனுப்பினான்.
10111. வணங்கி அந்தமில் மாருதி மாமலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்;
உணங்கு கொம்புக்கு உயிர்வரு நீர் என
சுணங்கு தோய்முலையாட்கு இவை சொல்லுவான்.
வாடிய பயிருக்கு நீர்
வார்ப்பது போல துயர் கொண்ட சீதையிடம் நற்சொற்களை அனுமன் உரைத்தான்.
10112. பாடினான் திருநாமங்கள்; பல் முறை
கூடு சாரியின் குப்புற்றுக் கூத்து நின்று
ஆடி அங்கை இரண்டும் அலங்குறச்
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான்.
சீதையின் அடிபணிந்து
இராமன் திருநாமங்களைப் பாடினான் அனுமன்.
10113. ‘ஏழை சோபனம்! ஏந்திழை சோபனம்!
வாழி சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது சோபனம்
அன்னை வாழ்க. சீதை
வாழ்க. அன்னைக்கு மங்களம் உண்டாகட்டும்.
10114. ‘தலை கிடந்தன தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித்தோள் எனும்
அலை கிடத்தன; ஆழி கிடந்தனெ
நிலைகிடந்தது உடல் நிலத்தே ‘என்றான்.
நிலத்தில் மலை
தனியாகக் கிடப்பது போல இராவணனின் தலை தனியாக விழுந்து கிடந்தது.
10120. அனையள் ஆகி அனுமனை நோக்கினாள்
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள்
என்ன பதில் சொல்வது
எனத் தெரியாமல் அமைதி கொண்டிருந்தாள் சீதை அன்னை.
10123. ‘முன்னை “நீக்குவென் மொய்சிறை ” என்ற நீ
பின்னை நீக்கி உவகையும் பேசினை;
“என்ன பேற்றினை ஈகுவது? ” என்பதை
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன்
அனுமனே முன்னர் நீ என்னை சிறையிலிருந்து மீட்பேன்
என்று சொல்லி மகிழ்ச்சியான மனநிலையை உண்டாக்கினாய். இப்போத தீமையை அழித்து அறம்
வென்ற நற்செய்தியை உரைக்கிறாய். உனக்கு என்ன சிறப்பினைச்
செய்வது என யோசித்து சொல்லற்றுப் போனேன்.
10124. ‘உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவுந் தகும் தன்மையோய்!
அனுமனே உன்னை
வணங்குகிறேன் என்றாள் சீதை அன்னை.
10126. ‘எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி! நின்
மனக்களிக்கு மற்று உன்னை அம் மானவன்
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ?
புனக் களிக்குல மாமயில் போன்றுளாய்!
அன்னையே ஸ்ரீராமனிடம்
நீங்கள் சென்று சேர்வதே நான் விரும்பும் வரம்.
10130. அன்னை ‘அஞ்சல்மின்! அஞ்சல்மின்! நீர் ‘எனா
மன்னும் மாருதி மாமுகம் நோக்கி வேறு
என்ன தீமை இவர் இழைத்தார் அவன்
சொன்ன சொல்லினது அல்லது? தூய்மையோய்!
அன்னையே! உங்களுக்குத்
தீமை விளைவித்த இந்த அரக்கியரை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
10131. ‘யான் இழைத்த வினையினின் இவ் இடர்
தான் அடுத்தது; தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அ(ல்)லரே இவர்?
போன அப்பொருள் போற்லை புந்தியோய்!
அனுமனே இவர்களை
மன்னிப்பாயாக என்றாள் அன்னை சீதை.
10133. என்ற போதின் இறைஞ்சினன் ‘எம்பிரான்
தன்துணைப் பெருந்தேவி தயா ‘எனா
நின்ற காலை நெடியவன் ‘வீடண!
சென்று தா நம தேவியைச் சீரொடும்
வீடணனை நோக்கி
ஸ்ரீராமன், ‘’சீதையை சிறப்போடு அழைத்து வருக’’ என்று கூறினான்.
10134. என்னும்காலை இருளும் வெயிலும் கார்
மின்னும் காலை இயற்கைய வீடணன்
‘உன்னும்காலைக் கொணர்தி ‘என்று ஓதும் அப்
பொன்னின் கால்தளிர் சூடினன் போந்துளான்.
வீடணன் சீதை அன்னையின்
பொன்னார் திருவடிகளை வணங்கினான்.
10135. ‘வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் வேதன், நின்னைக்
காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண வந்தார்;
“பூண்தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி,
ஈண்டு, கொண்டணைதி ‘‘ என்றான்; எழுந்தருள் இறைவி ‘என்றான்.
’’தெய்வமே! அணி பூண்டு
எழுந்தருள்க’’ என்று வீடணன் அன்னையைப் பணித்தான்.
10136. ‘யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி;
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது அன்று; வீர! ‘
‘’நான் இங்கே
சிறையிருந்த நிலையிலேயே என் தலைவனைக் காண விரும்புகிறேன்’’
10137. என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு இறைவன், ‘நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் குறிப்பு அது ‘என்றான்;
‘நன்று ‘என, நங்கை நேர்ந்தாள், நாயகக் கோலம் கொள்ள;
சென்றனர், வானநாட்டுத் திலோத்தமை முதலோர், சேர.
‘’முழுதணிக் கோலத்தில் வருக’’ என்பது ஸ்ரீராமனின் குறிப்பு என வீடணன் அன்னையிடம் தெரிவித்தான்.
10143. மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து என்ன, மானம்
கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து கூட
உண்டை வானரரும் ஒள்வாள் அரக்கரும் புறஞ்சூழ்ந்து ஓட,
அண்டர் நாயகன்பால், அண்ணல் வீடணன் அருளின் சென்று சேர்த்தான்
நிலவென ஒளிரும் சீதையை
வான்மகளிர் சூழ்ந்து வர ஸ்ரீராமனிடம் அழைத்துச் சென்றான் வீடணன்.
10144. இப்புறத்து இமையவர் முனிவர் ஏழையர்
துப்பு உறச் சிவந்தவாய் விஞ்சைத் தோகையர்
முப்புறத்து உலகினும்
எண்ணின் முற்றினார்
ஒப்புறக் குவிந்தனர் ஓகை கூறுவார்.
வானவர், முனிவர்,
பெண்கள் என அனைவரும் நற்சொற்கள் உரைத்த வண்ணம் சீதையைச் சூழ்ந்து வந்தனர்.
10145. அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்
மருங்குபின் முன்செல வழி இன்று என்னலாய்
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால்
கருங்கடல் முழக்கு எனப் பிறந்த கம்பலை.
சீதையைக் காண
கணக்கற்றோர் கூடினர். அரக்க வீரர்கள் அவர்களை ஒழுங்குபடுத்த முயன்ற போது பெரும்
கூச்சல் ஏற்பட்டது.
10146. அவ்வழி, இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்விவாள் முகம்கொடு செயிர்த்து நோக்கு உறா,
‘இவ்வொலி யாவது? ‘என்று இயம்ப, ‘இற்று ‘எனா,
கவ்வை இல் முனிவரர் கழறினார் அரோ
ஸ்ரீராமனுக்கு அக்கூச்சல்
கேட்டது. அது என்ன என்று முனிவர்களிடம் வினவினான்.
10148. ‘கடுந்திறல் அமர்க்களம் காணும் ஆசையால்
நெடுந் திசை தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அணைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்? கருது நூல்வலாய்!
வானத்து அமரர்கள்
இங்கே குழுமியுள்னர். அதனால் தான் இங்கு பெருங்கூட்டம் உள்ளது. அவர்களை
விரட்டாதீர்கள்.