தனித்திருந்தது பாதை
உதயத்தின் பொன்வெயில் உண்டு
மரக்கிளைகளில் கிரீச்சிடுகின்றன பறவைகள்
காற்றில் உருள்கின்றன சருகுகள்
உச்சி வெய்யில்
அந்திச் சோகம்
உண்டு
அந்த சாலை
ஓர் இன்மையை
ஒரு பிரிவை
ஒரு துயரைப்
பகிராமல்
சொல்லாக்காமல்
மௌனம் கொள்கிறது
அந்த மௌனத்தைப்
புரிந்து கொண்டு
நடக்கிறேன்
காலையும்
மாலையும்