மூச்சில்
அதிரும் நாடியில்
படிகிறது
எப்போதாவது சில துக்கங்கள்
*
காலம்
உருமாற்றிக்
கொண்டேயிருக்கிறது
அனைத்தையும்
*
எல்லா கண்ணீர்த் துளிகளும்
எல்லாரின் கண்ணீர்த் துளிகளும்
உன்னை
எப்போதும்
வருத்தமடையச் செய்திருக்கின்றன
*
நம்பிக்கைகளிலிருந்து
நம்பிக்கைகளும் நம்பிக்கையின்மைகளும் உள்ள வெளியில்
உலவிக் கொண்டிருக்கிறேன்
*
ஒளி இனிது
*
ஒளியின் நினைவுகளை
மங்கலடையச் செய்து விடாமல்
நடக்கும் பாதைதான்
எத்தனை நீண்டது
எத்தனை தனியானது