லௌகிகம் பல்வேறு கூறுகளால் ஆனது. அவற்றில் கண்ணுக்குத் தெரியும் பிரத்யட்சமான விஷயங்களும் உண்டு ; கண்ணுக்குத் தெரியாத அம்சங்களும் உண்டு. தொழில் , வாசிப்பு மற்றும் பொதுப்பணிகள் சார்ந்து லௌகிகத்தை நான் எப்போதுமே கூர்ந்து கவனிப்பவன். அது கணந்தோறும் பெருகுவது ; விரிவாவது. இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாக லௌகிகத்தின் உச்சத்தில் இருந்த நாடு. எனினும் லௌகிகத்துக்கு அப்பால் இருக்கும் ஆன்மீகமான நிலையையே பெரும் விழுமியமாக இந்தியா கொண்டிருந்தது. கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெருமை என்பது அதுவே.