தலைப்பிலிருந்தே துவங்கும் கதை. கதையின் நிறைவுக்கும் கதையின் தலைப்புக்கும் தொடர்பு உள்ள கதை.
நேர்மையற்ற ஒரு வணிகன் தன் வணிகத்தில் தவறு மேல் தவறு செய்கிறான். அந்த ஊருக்கு ஒரு சாமியார் வருகிறார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன் அந்த ஊருக்கு அந்த சாமியார் வந்திருக்கிறார். அப்போது அவருக்கு உணவளித்த ஒருவர் பெரும் செல்வந்தர் ஆகிறார். சாமியாரின் அருளே அவ்வாறு நிகழச் செய்தது என்ற நம்பிக்கை ஊரில் பரவி நிலைபெற்றிருக்கிறது.
வணிகனின் நேர்மையின்மையால் அவனுடைய வாடிக்கையாளர் பலர் பாதிக்கப்படுகின்றனர். தான் செய்த தவறுகளை மன்னித்து தன்னை அந்த தவறுகளின் தீய விளைவுகளிலிருந்து காக்குமாறு கேட்டுக் கொள்கிறான் அந்த வ்ணிகன்.
சாமியார் என்ன அறிவுறுத்தினார் என்ன செய்தார் என்பதில் ஒரு சிறு குறிப்பை எஞ்ச விட்டு நிறைவு செய்துள்ளார் தி.ஜா.