பாரதி கலைமகள் துதியில் , ‘’காணும் பொருளாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்’’ என்கிறான்.
சொல்லரசிக்கு இந்த நாளில் அடிபணிந்து வணக்கம். எந்நாளும் அவள் அடிபணியும் பெற்றி வாய்க்கப்பெற வேண்டும் என்பதே எனது பிராத்தனை.
கடந்த மூன்று மாதங்களில் நான் மிகவும் மதிக்கும் மூன்று நபர்கள் என்னுடைய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியாக வேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, கம்ப ராமாயணம் குறித்த ரசனை நூல், பயணக்கட்டுரை என வெவ்வேறு வகைமைகளில் பங்களிப்பு ஆற்றியுள்ளதால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் நூல் வடிவம் பெற வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. இத்தனை நூல்கள் வெளியிட தேவையான நேரம் இப்போது எனக்கு உள்ள பணிகளின் இடையே வழங்கப்பட முடியுமா என்ற ஐயம் நூல் வெளியீடு தொடர்பான எந்த பணியையும் துவங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
ஏதோ ஒரு விதத்தில் துவங்கலாம் என இந்த நாளில் எண்ணுகிறேன்.