அன்புள்ள அண்ணனுக்கு.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
'ஆயிரம் மணி நேரம் வாசிப்பு' கட்டுரையை வாசித்தேன்.
அதன் சார்ந்த உங்களால் எழுதப்பட்ட' சிறு துளிகள் பெருவெள்ளம்'. நான் கூட இனிவரும் நாட்களில் தினமும் இரண்டு மணி நேரம் வாசிப்பதாக முடிவு எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் எழுதிய
'காவேரியில் இருந்து கங்கை வரை ' கட்டுரை உங்களைப் பற்றிய ஒரு முழு அறிமுகம் எனக்கு கிடைத்துவிட்டது இனி வரும் காலங்களில் ஏதேனும் பயணம் மேற்கொண்டால் தம்பியும் அழைத்துச் செல்லுங்கள்.
உங்களின் அறிமுகத்துக்கு நன்றி. தொடர்ந்து உங்களின் Blogகில் வரும் கட்டுரைகளை தினமும் வாசித்து வருகிறேன்.
நான் எழுதலாம் என்று நீங்கள் கூறிய அந்த குறுநாவலை எழுதத் தொடங்கி உள்ளேன்.
நன்றி.
உங்கள்,
அன்புத் தம்பி