சில நாட்களுக்கு முன்னால், ஒரு வாசகர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு நாளின் அதிகாலையில் அவரது கடிதத்தைக் கண்டேன். அவர் தனது அலைபேசி எண்ணை அளித்திருந்தார். அந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்த பணிகளில் மறந்து விட்டேன். இன்று அவரை அழைத்துப் பேசினேன்.
’’லீலாவதி’’ சிறுகதைக்குள் இடம் பெற்றிருக்கும் நாட்டிய நாடகம் , ‘’புள்ளரையன் கோவில்’’ சிறுகதையில் இடம் பெற்றிருக்கும் கொற்றப்புள் ஆகிய்வை அவரை மிகவும் கவர்ந்திருந்தது. தனது வாசக அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
சாகித்ய அகாடெமி, தேசிய புத்தக நிறுவனம் ஆகியவை வெளியிட்டிருக்கும் இந்திய நாவல்களை வாசிக்குமாறு அவருக்குப் பரிந்துரைத்தேன். தாரா சங்கர் பானர்ஜி, விபூதி பூஷண் பந்தோபாத்யாய, கிரிராஜ் கிஷோர், குர் அதுல் ஐன் ஹைதர், பைரப்பா, சிவராம் காரந்த் மற்றும் தகழி சிவசங்கர பிள்ளை ஆகியோரின் நாவல்கள் அவருடைய இலக்கிய வாசிப்பு மனநிலைக்கு மிக அணுக்கமாக இருக்கும் என்று கூறினேன்.