Monday, 25 September 2023

கல்வி மையம்

 செயல் புரியும் கிராமத்தில் ஒரு கல்வி மையம் அமைக்க ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிடுகிறது. அந்த கல்வி மையத்தில் பல மொழிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது நமது விருப்பம். வேறு விஷயங்கள் என்னென்ன கற்பிக்க வேண்டும் என்று யோசித்துப் பார்த்தேன். 

1. மொழிகள் : தமிழ், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஜப்பானிஸ்

2. கணிதம் : எண்கள், அளவியல், பொருளியல், வணிகவியல்

3. அறிவியல் : அடிப்படை அறிவியல் கோட்பாடுகள், அரவிந்த் குப்தா அவர்களின் விளையாட்டு மூலம் அறிவியல்

4. தொழில்நுட்பம் : தச்சுப் பணி, எலெக்ட்ரிக் மற்றும் பிளம்பிங் அடிப்படைகள் 

5. யோகா : யோகாசனங்கள்

6. விளையாட்டு : பல்வேறு விதமான குழு விளையாட்டு மற்றும் சதுரங்கம்