உணர்வுகள் சொல்லாகாமல் கூட போகலாம்
மௌனத்திற்கு வந்து சேர்கின்றன சொற்களும் உணர்வுகளும்
நிசப்தமாயிருக்கிறது புறம்
நிசப்தத்தை சொற்களை உணர்வுகளை
அவதானித்திருக்கிறது அகம்
கரையலாம்
பற்றி எரியலாம்
சிற்றொலியும் எழ வேண்டாம்
சிறு அசைவும் வேண்டாம்
நீர் சுமக்கிறது ஆயிரம் விதைகளை
சாம்பலில் இருந்தும் எழுகிறது ஒரு பறவை
புல்லின் வேர்களின் அழிவின்மையால் ஆனது
இந்த புவி