Wednesday, 27 September 2023

புதிய உயிர்

 செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் - அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக - பாரதி. 

நமது தேசத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதிகாலைப் பொழுதிலும் மாலை அந்தியிலும் நண்பகல் சந்தியிலும் இந்த நுண்சொல் கோடிக்கணக்கானவர்களால் மனதுக்குள் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்த நுண்சொல்லை உயிர்த்துணையாக மானுடத்துக்கு அளித்தது நம் மரபு.  

மனிதனுக்கு மனிதனின் செயல்பாடுகளுக்கு எல்லைகள் உண்டு. அந்த எல்லைகளை குறுக்கிக் கொள்ளாமல் விரிவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பது மானுடத்தின் சிறப்பு. 

நாம் பிறந்ததிலிருந்து நம்முடைய சமூக பொருளாதாரச் சூழல் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. எனினும் ஒவ்வொரு மனிதனும் சிந்தனையின் மூலம் தனக்கான வாழ்முறையை உருவாக்கிக் கொள்ள முடியும். 

23 நாட்கள் உண்ணாவிரதம் அன்றாடத்தின் பல விஷயங்களை அணுக்கமாகக் காண நுணுக்கமாக அறிய உதவும் என்று கருதுகிறேன். அவ்வாறான ஒரு செயல் இப்போது தேவை என்று உணர்கிறேன்.