அன்பு பிரபு
வினைத்திட்பம் கொண்டொருவன் மக்கள் நலனுக்காக அரசு இயந்திரத்தின் முன் நின்றால் நிச்சயம் அது வழிவகை செய்தே தீரும். அறமென நம்பும் ஒன்றிற்காக நீங்கள் செயலில் காட்டும் உறுதியும் அதற்குண்டான தொடர் ஈடுபாடும் மிகுந்த நிறைவளிக்கிறது. எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் மக்கள் நலப்பணி யாவிலும் தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறுவதாகுக.
அன்புடன்,
மணிமாறன்
புதுச்சேரி