எப்போதும் தீவிரமாகப் பிரவாகிக்கிறது மொழி யின் உயிர்த்தளம். மலையுருகிப் பெருகும் நதியாக சமவெளி தொட்டு சீர்நடை கொள்ளும் நீராக சமுத்திரத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் அமைதியாக என அமைகிறது வானத்து அமுதின் மண் மீதான பயணம். காலந்தோறும் ஓடிக் கொண்டேயிருக்கிறது மொழியின் நீர்ப்பெருக்கு. ஒவ்வொரு மனிதனும் அதில் நீரள்ளி மீண்டும் அதனை அப்பெருக்கிலேயே விட்டு விடுகிறான். கவிஞன் அதைச் செய்யும் போது அந்த அனாதி கால நீர்ப்பெருக்கு சிலிர்த்துக் கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. கவிஞனின் உருவாக்கம் என்பது அத்தனை மகத்தானது. கவிஞர் சுபஸ்ரீயின் வலைப்பூவில் (manaodai.blogspot.com) அவரது கவிதைகளை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது மிக இனிய அனுபவமாக இருந்தது. நுண்மையான அரிதினும் அரிதான உணர்வெழுச்ச்சி கொண்டு ஒளிரும் இயல்புள்ள கவிதைகள் கவிஞர் சுபஸ்ரீயின் கவிதைகள். அவரது கவிதைகளை நான் வாசித்த விதத்தை உள்வாங்கிக் கொண்ட விதத்தை எழுத வேண்டும் என்று தோன்றியது. மலைப் பிரதேசத்தின் அதிகாலை மௌனம் போன்றவை அவரது கவிதைகள். அவரது கவிதைகளை அணுகும் வாசகன் அந்த அரிய மௌனத்தின் சில துளிகளை தன் அகத்தில் நிரப்பிக் கொள்கிறான். ஒவ்வொரு முறையும்.
தவம்
8. இசைத்தும்பி
46. மறப்பதெப்படி
---------
தன்னிடத்தில் தனித்தே
மலர்ந்திருக்கும் தாமரைகள்
வீழ்ந்தும் எழுந்துவரும் சூரியன்
வரம்தரவே பயணம் அனைத்தும்
வரம்பெறக் காத்திருத்தலே போதும்
மலர்ந்திருக்கும் தாமரைகள்
வீழ்ந்தும் எழுந்துவரும் சூரியன்
வரம்தரவே பயணம் அனைத்தும்
வரம்பெறக் காத்திருத்தலே போதும்
காத்திருத்தல் என்பது பெரும் வலி. வலி கொண்ட அச்செயலுக்கு தன்னை முழுதளிக்கிறனர் கோடானுகோடி மானிடர்களில் ஓரிருவர். காத்திருத்தல் சாமானியத்தின் எளிய சௌகர்யங்களைக் கூட ரத்து செய்து விடுகிறது. காத்திருத்தல் எந்த உறுதியையும் அளிப்பதில்லை. பரிதவிப்பும் கண்ணீரும் மட்டுமே எப்போதும் உடனிருக்கிறது. ராதை காத்திருந்தாள். மீரா காத்திருந்தாள். ஆண்டாள் காத்திருந்தாள். யாவையும் துறந்து யாவற்றையும் துறந்து . மோனப் பெருவெளியின் தெய்வத்தின் மௌனம் பேரன்பை நோக்கி பெருந்துறவை நோக்கி பிரியமான சொல் உரைத்து இறங்கி வந்தது ‘’தன்னிடத்தில் தனித்தே மலர்ந்திருக்கும் தாமரைகள் ‘’ நோக்கி. தவத்துக்கு கனிந்தே ஆக வேண்டும் தெய்வங்களின் விதி. ’’வரம்தரவே பயணம் அனைத்தும்’’ என தெய்வங்கள் நிலையை கூறும் இடம் நகைச்சுவை மிக்கது.
சாபவிமோசனம்
-----------------------------
கடுமொழி மோனத்துக்
கனன்ற சொல்லொன்று
புடமிட்டுத் தகத்தக்க
புள்ளொன்றால் கலைந்ததவம்
புலன்மறுத்த சித்தனவன்
கல்லென்று சபித்திட்டான்
கடுஞ்சொல்லால்
தவம் இழந்தான்.
காடுறையும் காலம்
கல்லாய் உறைந்திட
கூர்முனைகள் மழுங்கிட
உருட்டியது காலநதி.
உருவமிலி உருவேறி
பூசனைக்கு வந்தமர்ந்த
யுகங்கடந்த கல்தன்னை
பூசித்த முனிவனின்
யாசித்த கரங்களில்
கல்உறையும் புள்தருமோ
சாபவிமோசனம்
கனன்ற சொல்லொன்று
புடமிட்டுத் தகத்தக்க
புள்ளொன்றால் கலைந்ததவம்
புலன்மறுத்த சித்தனவன்
கல்லென்று சபித்திட்டான்
கடுஞ்சொல்லால்
தவம் இழந்தான்.
காடுறையும் காலம்
கல்லாய் உறைந்திட
கூர்முனைகள் மழுங்கிட
உருட்டியது காலநதி.
உருவமிலி உருவேறி
பூசனைக்கு வந்தமர்ந்த
யுகங்கடந்த கல்தன்னை
பூசித்த முனிவனின்
யாசித்த கரங்களில்
கல்உறையும் புள்தருமோ
சாபவிமோசனம்
‘’கடுமொழி மோனம்’’ சுவாரசியமான பதம். கடுமொழி கொண்ட ஒருவனுக்கு வாய்க்கப் பெற்ற மோனத்தைக் கவிஞர் ‘’கடுமொழி மோனம்’’ எனக் கூறிவிடுகிறார். அவனால் செல்ல முடிந்தது அங்கேதான் . வேறென்ன செய்வ்து ? ஒரு புள்ளை கல்லென சபித்திட்டான். கல்லான புள்ளிடமே அவன் தவத்தை இனி அவன் மீட்டுக் கொள்ள வேண்டும். பூசித்த முனிவனின் யாசித்த கரங்களுக்கு வந்து சேருமா சாபவிமோசனம் என வேடிக்கையாகக் கேட்கிறார் கவிஞர். தமிழ் செய்யுள்களில் இவ்வாறான கதைகளையும் கேள்விகளை யும் இணைத்து பாடும் மரபு உண்டு. கவி காளமேகம் அதில் முன்னோடி. நவீன கவிஞர்களில் ஞானக்கூத்தன் தன் கவிதைகளில் இவ்வாறு செய்வதுண்டு. கண்டராதித்தன் கவிதைகளிலும் இது நிகழும். கவிஞர் சுபஸ்ரீ கவிதைகளிலும் இத்தன்மை உண்டு.
****
ஆதியிலிருந்தது என்ன
ஆதியின் மூலமென்ன
அறியொணாத ஒன்றென்றால்
உன் அறிவால் ஆவதென்கொல்
தேடிடும் இரந்திடும் நீ
அகந்தையென்றாகிடும் நீ
அறியாத ஒன்றுள்ள வரை
அறிவின் ஆணவம் ஏன்
ஆதியின் மூலமென்ன
அறியொணாத ஒன்றென்றால்
உன் அறிவால் ஆவதென்கொல்
தேடிடும் இரந்திடும் நீ
அகந்தையென்றாகிடும் நீ
அறியாத ஒன்றுள்ள வரை
அறிவின் ஆணவம் ஏன்
அறிவின் ஆணவம் ஏன் எனக் கேட்பவன் கவிஞன். அறிவின் ஆணவம் கொண்டவனிடம் அந்த கேள்வியைக் கேட்கிறான் கவிஞன். அறியாத ஒன்று இருக்கிறது எனக் கூறும் கவிஞனின் கூற்று அறிவின் ஆணவம் கொண்டவனுக்கும் உண்மைதானே எனத் தோன்றிவிடுகிறது. கேள்வி கேட்பவனும் கேள்வி கேட்கப்படுவனும் ஒரே இடத்தில் இருக்கிறார்களா ? கேள்வி கேட்பவன் அறியாத ஒன்றை முழுதும் அறிந்து விட்டானா அல்லது அதனை நோக்கி மேலும் சில அடிகளோ பல அடிகளோ சென்று விட்டானா?
****
.
மறுபடி மரணம்
மறுபடி ஐனனம்
இடையினில் இருளினில்
தேடல்தான் பயணம்..
சிலர் வழிகாட்டுவார்
பலர் நடைபோட்டிட -
சிலர் பலராகவே
அவர் வலிதாங்குவார்
பிறன் நலம்வாழ்ந்திடத்தன்
பிறவியை மாற்றுவார்
முள்முடி தாங்கியும்
முகமலர் காட்டுவார்
விறகொடு எரிவது
உடலது தானே
உடன்வரப் போவது
அவனருள் தானே
மண்ணொடு கலந்தபின்
எஞசுவதென்ன
மனதொடு கலந்திடும்
நினைவுகள்தானே
வெற்றுத் தாளொடு
பிறந்தவர் நாமே
எழுதுவோம் பாக்களை
அன்பொடு தினமே
தாளது ஒருதினம்
அவன்தாள் சேரும்
எழுதிய கவிதைகள்
மனதிடை வாழும்
அன்பது சிவமாம்
அன்பது தவமாம்
வாழ்வை நீட்டும்
அன்பின் கரமாம்..
அன்பே சிவம்! அன்பே சிவம்!!
மறுபடி ஐனனம்
இடையினில் இருளினில்
தேடல்தான் பயணம்..
சிலர் வழிகாட்டுவார்
பலர் நடைபோட்டிட -
சிலர் பலராகவே
அவர் வலிதாங்குவார்
பிறன் நலம்வாழ்ந்திடத்தன்
பிறவியை மாற்றுவார்
முள்முடி தாங்கியும்
முகமலர் காட்டுவார்
விறகொடு எரிவது
உடலது தானே
உடன்வரப் போவது
அவனருள் தானே
மண்ணொடு கலந்தபின்
எஞசுவதென்ன
மனதொடு கலந்திடும்
நினைவுகள்தானே
வெற்றுத் தாளொடு
பிறந்தவர் நாமே
எழுதுவோம் பாக்களை
அன்பொடு தினமே
தாளது ஒருதினம்
அவன்தாள் சேரும்
எழுதிய கவிதைகள்
மனதிடை வாழும்
அன்பது சிவமாம்
அன்பது தவமாம்
வாழ்வை நீட்டும்
அன்பின் கரமாம்..
அன்பே சிவம்! அன்பே சிவம்!!
இந்த கவிதை ஆதி சங்கரரின் ’’புனரபி ஜனனம் புனரபி மரணம்’’ வரிகளிலிருந்து தனது உணர்வுநிலையைப் பெற்றுக் கொள்கிறது. மானுடன் எளியவன். பாச நேசங்களின் தவிப்பால் அலைக்கழி க்கப்படுபவன். தேடியாக வேண்டும். அதுவும் இருளில் தான் தேட வேண்டும். முள்முடியென அழுத்தும் வாழ்விலும் அந்த வலியை மலர்ச்சியாக மாற்றிக் கொண்டு பயணிக்கின்றனர் சிலர். அவர்களைக் குறித்த நினைவுகளில் நிறைந்திருக்கிறது தெய்வாம்சம். அன்பே தவம். அன்பே சிவம்
****
கனவுகள் சுவடுகள்
------------------------------ --
கண்ணெரியக் கனன்றெரியும்
வெந்நீர் அடுப்பு விறகுப் புகை..
கிணற்றுறையில் கூடுகட்டி
தவறி விழும் சிறுகுருவி..
பிசின் வடியும் பட்டை
தூரில்துளிர் சிறு வேம்பு..
வால் தூக்கி அணில் துரத்த
தாவும் ஒரு காகம்..
துணி துவைக்கும் கல்லில்
காக்கை அணில் சமபந்தி..
மஞ்சள் உரசிப் பச்சையான
கல்லிடுக்கு ரசவாதம்..
நிலவொளியை வடிகட்டி
இளநீராக்கும் தென்னை..
நிலவுதிர் கால இரவுகளில்
இறைந்து கிடக்கும் வேப்பம்பூ..
கிணற்றுறையில் கூடுகட்டி
தவறி விழும் சிறுகுருவி..
பிசின் வடியும் பட்டை
தூரில்துளிர் சிறு வேம்பு..
வால் தூக்கி அணில் துரத்த
தாவும் ஒரு காகம்..
துணி துவைக்கும் கல்லில்
காக்கை அணில் சமபந்தி..
மஞ்சள் உரசிப் பச்சையான
கல்லிடுக்கு ரசவாதம்..
நிலவொளியை வடிகட்டி
இளநீராக்கும் தென்னை..
நிலவுதிர் கால இரவுகளில்
இறைந்து கிடக்கும் வேப்பம்பூ..
கனவுகள் தொட்டெடுக்கும்
நடைபயின்ற நாட்களின்
நாற்றங்கால் பதியங்கள்..
நேற்று'கள்' நிறைந்திட்ட
இன்றைய கனவுகளில்
இன்றுக்கு இடமில்லை..
நாளைவரும் கனவுகளில்
அசைபோட இசைகூட
இன்றெவையோ கருப்பொருட்கள்..
நடைபயின்ற நாட்களின்
நாற்றங்கால் பதியங்கள்..
நேற்று'கள்' நிறைந்திட்ட
இன்றைய கனவுகளில்
இன்றுக்கு இடமில்லை..
நாளைவரும் கனவுகளில்
அசைபோட இசைகூட
இன்றெவையோ கருப்பொருட்கள்..
கவிஞர் தன் சொற்களால் ஒரு சூழலைக் காட்டுகிறார். யாரும் எப்போதும் காணும் சூழல் எனினும் கவிஞ்ர் சொற்களில் கவிஞர் அடுக்கும் விதத்தில் அவை தனி உலகமாகி விடுகின்றன. நேற்று கண்ட அவற்றை இன்று கனவில் காணும் கவிஞர் நாளை காணப்போகும் கனவில் வரப்போவது எவை என்று குழந்தைக்குரிய பரவசத்துடன் கேட்டுக் கொள்கிறார்.
தொலையும் வரை தேடு
------------------------------ -------------
யாரோ சொல்லிப்போன
சொற்களில் தேடாதே
என் விதையாம் கவிதைகளை
நிழலில் ஒளிதேடி
நிறமில்லை என்னாதே
நன்றாகத் தேடிப்பார்
தொலையும்வரை கிட்டும்வரை
என் விதையாம் கவிதைகளை
நிழலில் ஒளிதேடி
நிறமில்லை என்னாதே
நன்றாகத் தேடிப்பார்
தொலையும்வரை கிட்டும்வரை
அன்றொருநாள்
குடைதேடிக் கவிகள்
கூரையுள் புகும்போது
நனைந்தபடி கவிதை
மழையோடு போனது
குடைதேடிக் கவிகள்
கூரையுள் புகும்போது
நனைந்தபடி கவிதை
மழையோடு போனது
அன்றும் ஒருநாள்
சந்தையடி சந்தடியில்
நடமாட இடமின்றி
அஞ்சுவதஞ்சிக் காணாமல்போன
பஞ்சுமிட்டாய் பொம்மையுடன்
தோளேறிப் போனது
சந்தையடி சந்தடியில்
நடமாட இடமின்றி
அஞ்சுவதஞ்சிக் காணாமல்போன
பஞ்சுமிட்டாய் பொம்மையுடன்
தோளேறிப் போனது
இன்றும் அன்றுதானோ
என்றும் இன்றுதானோ
எங்கேயோ வழிதவறி
சொற்காட்டில் சிக்கி
திக்குத்தெரியாமல்
மயங்கி நிற்கலாம்
அந்தமயக்க விதை
என்றும் இன்றுதானோ
எங்கேயோ வழிதவறி
சொற்காட்டில் சிக்கி
திக்குத்தெரியாமல்
மயங்கி நிற்கலாம்
அந்தமயக்க விதை
சித்தமோ சிவன்போக்கு
நித்தமும் நீள்வாக்கு
நடந்த தடம் காணாது
மேகம்போல் கடந்துவிடும்
எங்கேனும் எவரேனும்
கண்ணால் கண்டுகொண்டால்
கண்டவர் அக்கணமே
காணாமல் போகுங்கால்
பிழைத்திருக்கக் கூடும்
பிழையாத என் கவிதை!!
நித்தமும் நீள்வாக்கு
நடந்த தடம் காணாது
மேகம்போல் கடந்துவிடும்
எங்கேனும் எவரேனும்
கண்ணால் கண்டுகொண்டால்
கண்டவர் அக்கணமே
காணாமல் போகுங்கால்
பிழைத்திருக்கக் கூடும்
பிழையாத என் கவிதை!!
இளைப்பாறல் வேண்டும் எனில் சுமைகளை இறக்க வேண்டும். கவிதையைக் கண்டடைய கவிதையில் தொலைந்து போக வேண்டும். கவிஞர் அதனால் ’’தொலையும் வரை தேடு’’ என்கிறார்.
3. நீங்காதான் நினைவு
*************************
கணத்துகள்கள் சரிந்திறங்கும்
குடுவை
ஒவ்வொரு இமைப்பொழுதும்
நீங்காதான் நினைவு
நிறைந்தொழுகும் அகக்கடிகை
நிலைமீள நிலைமாறும்
பகலைத் தலைகீழாக்கும் இரவில்
ஒவ்வொரு சரிதலும்
ஆயிரம்நாகொண்டு படமெடுக்கும்
யுகமென சுருளவிழும்
இவ்விரவின் ஒருதுகளை
சற்றேனும் உறங்கவிடு
‘’இவ்விரவின் ஒருதுகள்’’ எது ? யார்? நாதன் தாள் இமைப் பொழுதும் நீங்காமல் தவித்திருப்பது எதற்காக ? சிவத்திடம் உரையாடும் சக்தியா? ‘’சற்றேனும் உறங்கவிடு’’ என்பது சிவனுக்கு இடப்படும் கட்டளையா?
5. நீலனே
***********
நீலனே
என்ன கோருகிறாய்
என்னிடமிருந்து?
நில்லாத பயணமா
ஆயிரம் காதமா
அதுவொன்றும் தூரமல்ல
ஒற்றைக்கால் தவமா
தென்திசைக் கன்னிக்கு
அலைகடலும் சாரமல்ல
நூறு பிறவிகளின் தவிப்பா
வேறொன்றில்லா சித்தமிது
எண்ணங்களும் பாரமல்ல
கண்கட்டை நீக்கிவிட்டு
ஒளிந்து கொள்பவனே
இது என்ன ஆடல்?
பல்லாயிரம் சொற்களை முன் வைக்கிறேன்
சொல்கடந்த மௌனத்தை
நிகர் வைக்கிறாய்
நில்லாத என் விழிநீரை
நறுமண நீரென்று சூடுகிறாய்
உறக்கமழிந்த என் விழிகளை
உறுமணியாய் அணிந்தோய்
கனமொழியா நினைவுகளை
குழல் மூச்சாய் நிறைத்தவனே
உனைச் சேரும்
தவமன்றி ஏதுமில்லை
இந்நதிக்கு
என்னிடமிருந்து?
நில்லாத பயணமா
ஆயிரம் காதமா
அதுவொன்றும் தூரமல்ல
ஒற்றைக்கால் தவமா
தென்திசைக் கன்னிக்கு
அலைகடலும் சாரமல்ல
நூறு பிறவிகளின் தவிப்பா
வேறொன்றில்லா சித்தமிது
எண்ணங்களும் பாரமல்ல
கண்கட்டை நீக்கிவிட்டு
ஒளிந்து கொள்பவனே
இது என்ன ஆடல்?
பல்லாயிரம் சொற்களை முன் வைக்கிறேன்
சொல்கடந்த மௌனத்தை
நிகர் வைக்கிறாய்
நில்லாத என் விழிநீரை
நறுமண நீரென்று சூடுகிறாய்
உறக்கமழிந்த என் விழிகளை
உறுமணியாய் அணிந்தோய்
கனமொழியா நினைவுகளை
குழல் மூச்சாய் நிறைத்தவனே
உனைச் சேரும்
தவமன்றி ஏதுமில்லை
இந்நதிக்கு
கவிதை இறைமையைச் சந்தித்து உரையாடும் தருணம் ஒன்று இருக்கிறது. அத்தருணம் இக்கவிதை.
8. இசைத்தும்பி
******************
கிளையசைத்து கடக்கிறது காற்று
மணத்தை அனுப்பிவிட்டு கிளையமரும் சிறுமலர்
அருந்தேன் தேடி எங்கோ கிளம்பிவிட்ட இசைத்தும்பி
மகரந்தத்துகள் சுமந்து
திசைபரவும்
நாளைய மலர்களுக்காய்
தும்பியின் கீதம்
மணத்தை அனுப்பிவிட்டு கிளையமரும் சிறுமலர்
அருந்தேன் தேடி எங்கோ கிளம்பிவிட்ட இசைத்தும்பி
மகரந்தத்துகள் சுமந்து
திசைபரவும்
நாளைய மலர்களுக்காய்
தும்பியின் கீதம்
திருவாசகத்தில் திருக்கோத்தும்பி என்ற பகுதி உண்டு. தமிழ் மரபில் தும்பி ஒரு இசைக்கலைஞன். கவிஞர் அவனை நாளைய மலர்களுக்காய் கீதம் இசைக்கும் இசைக்கலைஞன் என்கிறார்.
10. விழித்திருக்கும் இரவு
******************************
பகலறியாத பாதைகளில்
இரவு நடமாடுகிறது
மணலில் கிடக்கும்
நேற்றின் பாதச்சுவடுகளில்
வெப்பம் ஏறுகிறது
யுகச்சிமிட்டலுக்குக் காத்திருந்த
அச்சிறு விண்மீன்
நீல வெளியுள்
மூழ்கி மறைகிறது
வானில் அலைகள் எழ
கடலில் விண்மீன்கள் மிதக்கின்றன
படகை செலுத்தியபடி
வலை விரிக்கிறான்
கொஞ்சமாய் துள்ளல்கள்
இன்னும் முடியவில்லை
வலைக்குள் துடிக்கும்
மீன்களின் இரவு
இரவு நடமாடுகிறது
மணலில் கிடக்கும்
நேற்றின் பாதச்சுவடுகளில்
வெப்பம் ஏறுகிறது
யுகச்சிமிட்டலுக்குக் காத்திருந்த
அச்சிறு விண்மீன்
நீல வெளியுள்
மூழ்கி மறைகிறது
வானில் அலைகள் எழ
கடலில் விண்மீன்கள் மிதக்கின்றன
படகை செலுத்தியபடி
வலை விரிக்கிறான்
கொஞ்சமாய் துள்ளல்கள்
இன்னும் முடியவில்லை
வலைக்குள் துடிக்கும்
மீன்களின் இரவு
கவிஞன் வாசகனை மூழ்கடித்து திணற வைக்கும் இடங்கள் கவிதையில் எப்போதும் இருக்கும். கவிஞனின் சில வரிகள் வாசகன் பல நாட்கள் எண்ணியிருந்த பல விஷயங்களை சட்டென இல்லாமல் செய்து விடும் தருணங்கள் உண்டு. ’’பகலறியாத பாதைகளில் இரவு நடமாடுகிறது’’ என்ற வரி என்னை அவ்விதம் திணற வைத்தது. ’’இன்னும் முடியவில்லை வலைக்குள் துடிக்கும் மீன்களின் இரவு’’ என்னும் வரி உக்கிரம் கொண்டது. தீவிரமானது.
17. வானெனப்படுவது அது
****************************** ***
வட்டங்களால் ஆன வானமொன்றை
வரைந்து செல்கிறது புள்
வண்ணங்களால் ஆனதே வானமென்று
சிறகசைக்கிறது தும்பி
ஒலியால் ஆனதென்று
சிலம்பியது குருவி
ஒளியால் ஆனதென்றது விழி
தானற்றதனைத்துமே வெளியென்றது புவி
ஏதுமில்லாது ஏகாந்தித்திருந்தது அது
வட்டங்களால் ஆன வானமொன்றை
வரைந்து செல்கிறது புள்
வண்ணங்களால் ஆனதே வானமென்று
சிறகசைக்கிறது தும்பி
ஒலியால் ஆனதென்று
சிலம்பியது குருவி
ஒளியால் ஆனதென்றது விழி
தானற்றதனைத்துமே வெளியென்றது புவி
ஏதுமில்லாது ஏகாந்தித்திருந்தது அது
இந்த கவிதையை எழுதிய கவிஞன் முதலில் புள் ஆகிறான். பின்னர் தும்பி ஆகிறான். அதன் பின்னர் குருவியாகிறான். மேலும் விழி ஆகி புவி ஆகி வெளி ஆகிறான். பின்னர் அவனே ஏதுமில்லாது ஏகாந்திருக்கும் சாரமான இருப்பும் ஆகிறான். கவிஞர் சுபஸ்ரீயின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று இக்கவிதை.
1
1
23. ஆயிரம் நிலவுகள்
*************************
நீளும் மழையை இரவு நனைக்கிறது
மூடாத கனவுகளை விழிகள் நிறைக்கிறது
பரவும் திசை குழலிசை தேடி அலைகிறது
சொட்டி ஓய்ந்த நாளோரம் வழி தேங்கிக் கிடக்கிறது
சிதறிய உன்னை சேகரிக்கும் என்னை
அறிந்து கண்சிமிட்டும் ஆயிரம் நிலவுகள்
நீளும் மழையை இரவு நனைக்கிறது
மூடாத கனவுகளை விழிகள் நிறைக்கிறது
பரவும் திசை குழலிசை தேடி அலைகிறது
சொட்டி ஓய்ந்த நாளோரம் வழி தேங்கிக் கிடக்கிறது
சிதறிய உன்னை சேகரிக்கும் என்னை
அறிந்து கண்சிமிட்டும் ஆயிரம் நிலவுகள்
மிக மிக மெல்லிய உணர்வைப் பேசும் கவிதை இது. மழையை நனைக்கும் இரவை கனவை நிறைக்கும் விழிப்பை குழலிசை தேடும் திசையை சேகரிக்கும் ஜீவன் செய்வது என்ன என்பதை அறிந்து கண் சிமிட்டுகின்றன ஆயிரம் நிலவுகள். ஆயிரம் நிலவுகள் கொண்ட வானம் நிறைந்த பிரதேசத்தில் நிகழ்கிறது இக்கவிதை ; இந்த உணர்வு.
46. மறப்பதெப்படி
*********************
உன் புன்னகையை
அடுக்கி வைக்கிறாள்
பூவிற்கும் பெண்
உன் அழைப்பை
கூவிச் சொல்கிறது
சிறுகுருவி
உன் மௌனத்தை
வாயிலிட்டு சுவைக்கிறது
இந்த இரவு
உன் தனிமையை
அறிவிக்கிறது
ஒற்றை விண்மீன்
இங்கு நான் உனை மறப்பதெப்படி
உன் புன்னகையை
அடுக்கி வைக்கிறாள்
பூவிற்கும் பெண்
உன் அழைப்பை
கூவிச் சொல்கிறது
சிறுகுருவி
உன் மௌனத்தை
வாயிலிட்டு சுவைக்கிறது
இந்த இரவு
உன் தனிமையை
அறிவிக்கிறது
ஒற்றை விண்மீன்
இங்கு நான் உனை மறப்பதெப்படி
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பூவில் பறக்கும் சின்னஞ்சிறு பறவையில் மௌனம் நிறைந்திருக்கும் இரவின் கணங்களில் ஒற்றை விண்மீனில் தன் ஆத்மதோழமையை உணர நேரின் அங்கே பிரிவு ஏது ? நினைவு ஏது?