தரங்கம்பாடி
உங்களுக்குத் தெரிந்திருக்கும்
பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள்
தரங்கங்களின் பாடல்
கவித்துவமான பெயரை சூடி நிற்கிறது ஊர்
தரங்கம்பாடியின் கடல் அலைகள்
பாடவும் செய்கின்றன
கேட்கவும் செய்கின்றன
பார்க்கவும் செய்கின்றன
கடல் கண்டு அலை கண்டு
குழந்தைகள் கும்மாளமிடுவதை
அலை நீர்மையின் குளிர்ச்சி
கால்களைத் தீண்டும் போது
மனிதர்கள்
மனம் குளிர்வதை
சூரிய சந்திர உதய அஸ்தமனப் பொழுதுகளை
அலைகளில் ஆடும் கட்டுமரங்களை
கடல் மேல் பறக்கும் பறவைகளை
எல்லாவற்றையும் பார்க்கின்றன
தரங்கம்பாடியின் அலைகள்
மென்மையான இனிமையான இசையை
மென்மையான இனிமையான பாடலை
பெரும்பாலும்
இசைக்கவும்
பாடவும்
உளம் கொண்டுள்ளன
பாடி அலைகள்
கரையில் இருப்பவர் கால்களைத்
தேடி வந்து தொடும் அலைகள்
தரங்கங்களின் பாடல்
துயருற்றிருப்பவர்க்கு
ஆதுரமாக இருக்கட்டும் என்றே
நினைக்கின்றன
எப்போதும்
அனாதி காலமாக
லோகம் என்பது என்ன
என்பதை
அறிந்திருந்தாலும்