இன்று காலை வன்னி மரம் தலவிருட்சமாய் உள்ள வன்னியூர் என்ற ஊரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டேன். வன்னி மரம் நெருப்பின் அம்சம் கொண்ட மரம். சைவத்தில் வன்னியும் வில்வமும் மிகவும் புனிதத்தன்மை கொண்ட மரங்கள். வன்னி மரத்தின் நிழலில் அமர்வது நம் அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்தக் கூடியது என்பது சைவ மரபு. நாவுக்கரசர் தனது பதிகத்தில் இந்த பகுதியை வன்னிக்காடு என்கிறார். அவர் காலகட்டத்தில் அத்தனை வன்னி மரங்கள் இருந்திருக்கின்றன. சிவ லிங்கம் அற்புதமான அழகுடன் விளங்கியது. சிறிய ஆலயம் என்றாலும் பெருஞ்சிறப்புகளுக்கு உரியது என்பதை ஆலயத்தில் இருந்த போது உணர முடிந்தது. அக்னி தேவன் இழந்த தன் இயல்பை இங்கே உள்ள சிவனை வணங்கி சிவன் அருளால் மீட்டுக் கொண்டார் என்பது இந்த ஆலயத்தின் ஐதீகம். அம்மன் கௌரி பார்வதியாக சிவனை நோக்கி தவமிருந்த தலம் என்பதும் ஐதீகம்.
Saturday 15 June 2024
வன்னியூர்