Tuesday, 26 November 2024

மாசின்மை

 இன்று முழுக்க மழை பெய்து கொண்டிருந்தது. சட்டென ஒரு கணம், மழையில் முழுமையாக நனைய விரும்பி வீட்டின் மாடிப் பரப்புக்குச் சென்றேன். வானம் முழுக்க மேகங்களால் மூடியிருந்தது. சீராக மழைத் தாரைகள் கொட்டிக் கொண்டிருந்தன. நான் பார்த்த போது இரு மைனாக்களும் சில தவிட்டுக் குருவிகளும் மழையில் நனைந்து கொண்டிருந்தன. ஒரு சிறு பறவை அத்தனை பிரும்மாண்டமான வான்பரப்பின் கீழ் தனித்திருப்பதில் பெரும் மகத்துவம் இருப்பதாகத் தோன்றியது. ஒவ்வொரு மழைத்துளியும் விண்ணின் ஆசிகள். ஒவ்வொரு மழைத்துளியும் விண்ணின் பிரியங்கள். மழையில் முழுதாக நனைந்தேன். மழைத்துளிகளின் மாசின்மையை அகத்தில் உணர்ந்தேன்.