Wednesday, 27 November 2024

மழை தினம்

 இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மழையின் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறது. மழை சிறுவனுக்குரிய உற்சாகத்தைக் கொண்டு வந்து விடுகிறது. பாதி வாசித்திருந்த நூல் ஒன்றின் மீதியை மெதுவாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பனுடைய கவிதைத் தொகுப்பைக் கொண்டு வருவதற்கான பணிகளைத் துவக்கியுள்ளேன். சில லௌகிகப் பணிகள் இருந்தன. அவற்றுக்கான குறிப்புகளை உரியவர்களுக்கு அளித்தேன். மழையை மட்டும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும் என விரும்பினேன்.