Wednesday, 27 November 2024

சி.பி.கி.ராம்.ஸ் புகாருக்கான பதில்

 ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக சி.பி.கி.ராம்.ஸ்-ல் பதிவு செய்திருந்த புகாருக்கு நேற்று பதில் அளிக்கப்பட்டிருந்தது. அனேகமாக நேற்று மாலை பதில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு பதில் அளிக்கப்பட்டால் நமது அலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தியும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலும் சி.பி.கி.ராம்.ஸ் அனுப்பி வைக்கும். எனக்கு பதிவுத்தபாலில் அனுப்பிய கடிதத்தை பதிலாக சி.பி.கி.ராம்.ஸ்-ல் இணைத்திருந்தார்கள். நேற்று இரவே அதனைக் கண்டேன். அதன் தமிழாக்கத்தை கீழே தருகிறேன். பதிவுத்தபால் இன்று மதியம் என் முகவரிக்கு வந்தது.

***

அனுப்புநர்

*****

****

***

பெறுநர்

ர.பிரபு

*****

****

***

பொருள் : சி.பி.கிரா.ம்.ஸ் புகார் எண் ***** தொடர்பாக 

18.11.2024 அன்று தாங்கள் அளித்த மின்னணு பண பரிமாற்ற விண்ணப்பத்துக்கு உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாதது தொடர்பாக தங்களால் மேற்படி சி.பி.கி.ராம்.ஸ் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட அசௌகர்யத்துக்கு வருந்துகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,

*****

நகல்:

தி போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்

செண்ட்ரல் ரீஜன் (தமிழ்நாடு)

திருச்சிராப்பள்ளி