அனுப்புநர்
ர.பிரபு
*****
பெறுநர்
பொது தகவல் அதிகாரி
அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்
*****
ஐயா,
பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோருதல்
பார்வை : 19.10.24 தேதியிட்ட எனது புகார்
19.10.24 அன்று மின்னணு பண பரிமாற்றத்தின் ஒப்புகைச் சீட்டை உடன் வழங்காமல் தாமதமாக வழங்கியது தொடர்பாக ஒரு புகார் அனுப்பியிருந்தேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அந்த புகார் தொடர்பான கோப்பின் நகலை வழங்குமாறு விண்ணப்பித்துக் கொள்கிறேன். இத்துடன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கட்டணமான ரூ.10 ஐ இந்திய போஸ்டல் ஆர்டராக இணைத்துள்ளேன். ( எண் ** *****)
நன்றி
தங்கள் உண்மையுள்ள
இடம் : மயிலாடுதுறை
நாள் : 18.12.2024