முன்னர் எனக்கு ஒரு வழக்கம் இருந்தது. இரவு 9 மணிக்கு உறங்கி விடுவேன். 8.45 ஆகி விட்டாலே தூக்கம் கண்களைச் சுழற்றும். படுத்து ஒரு சில நிமிடங்களில் உறங்கி விடுவேன். கனவுகள் இல்லாத ஆழமான உறக்கம் கொள்வேன். அபூர்வமாக என்றாவது ஒருநாள் ஏதேனும் கனவுகள் தோன்றும். காலை விழித்தவுடன் அந்த கனவினை ஞாபகப்படுத்திப் பார்ப்பேன்.
எனது நண்பரின் மகளுக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நிகழ இருக்கிறது. அந்த திருமண நிகழ்வு எனது கனவில் வந்தது. அந்த திருமணத்துக்கு எனது இன்னொரு நண்பரின் அன்னை வந்திருக்கிறார். நான் அவருடன் உரையாடுகிறேன். எனது நண்பரின் அன்னை 10 ஆண்டுகளுக்கு முன்னால் காலமானார். அவர் கனவில் வந்தது வியப்பை அளித்தது.