ஒரு மாதம் முன்பு ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அவ்விஷயத்தின் கோப்பினைக் கேட்பது என முடிவு செய்த போது என் முன் மூன்று சாத்தியங்கள் இருந்தன. முதலாவது, சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பைக் கேட்பது. இரண்டாவது, சி.பி.கி.ராம்.ஸ் புகார் , எழுத்துபூர்வமான புகார் இரண்டின் கோப்பையும் கேட்பது, மூன்றாவது எழுத்துப்பூர்வமான புகாரின் கோப்பைக் கேட்பது.
எழுத்துப்பூர்வ புகாரின் கோப்பை முதலில் கேட்பது என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தேன். எனது உள்ளுணர்வு அவ்விதம் செய்யச் சொன்னது.
எழுத்துப்பூர்வமான புகார் சி.பி.கி.ராம்.ஸ் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தாலும் ஒருவேளை சி.பி.கி.ராம்.ஸ் புகார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் பதிலளிக்கும் ஒரு மாத காலகட்டத்தில் ஏதேனும் நிகழ்த்த விசாரணை அதிகாரிக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவ்விதம் செய்தேன்.
நாளை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பை கேட்க இருக்கிறேன். முப்பது நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரிக்கு மேலும் முப்பது நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
என்ன நிகழ்கிறது என்பதைக் காண்போம்.