அன்பு பிரபு,
வணக்கம் ! வாழ்த்துகள்!
நீங்களும் உங்கள் இல்லத்தாரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சாதிக்குப் பாதி நாளா? நூல் பற்றிய உங்களுடைய பதிவைப் படித்தேன். கடந்த வருடமே நான் அந்த நூலைப் படித்து இருக்கிறேன். பட்ட ஆய்வு நூலுக்கான மொழி நடை கொண்டது. சி ஆர் அவர்களுடைய கல்வித் திட்டம் பற்றிய ஒரு முக்கியமான ஆவணம். (ஒரு முழுமையின்மை தெரிந்தாலும் ). BR mahaadevan அவர்களுடைய நூல் ஒன்று இதே கல்வித் திட்டம் பற்றியது. இந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். கல்வித்திட்டம் பற்றிய பேரவை விவாதங்கள், C R அவர்களால் அமைக்கப்பட்ட பருலேகர் கமிட்டி பரிந்துரைகள் மற்றும் மசோதா விலக்கிக் கொள்வது பற்றிய கல்வி அமைச்சர் சி எஸ் அவர்களின் உரை ஆகியவற்றைக் கொண்டது.
நன்றி
அன்புடன்
ஆர்