Sunday, 19 January 2025

ஒப்புகைச் சீட்டு விவகாரம் - RTI பதில்

ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக நான் அனுப்பிய புகார் தொடர்பான கோப்பினை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தேன். அந்த கோப்பு எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கோப்பில் இருக்கும் விபரங்கள் கீழ்க்கண்டவாறு : 

1. 19.10.2024ல் நான் அனுப்பிய புகார்

2. 24.10.2024ல் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் நான் அனுப்பிய புகார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்து எனக்கு அனுப்பிய பதில். 24.10.2024 அன்றே எனக்கு அனுப்பிய கடிதத்தின் அலுவலகப் பிரதியில் துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் கையொப்பமிட்டுள்ளார். (அவரே விசாரணை அதிகாரி).

3.24.10.2024 அன்று அஞ்சல்துறை கண்காணிப்பாளர் துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு எனது புகார் குறித்து தெரிவித்து விசாரணை மேற்கொண்டு ஒரு வார காலத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு கூறி கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். 

4.24.10.2024 அன்று அஞ்சல்துறை கண்காணிப்பாளர் எழுதியுள்ள ‘’அலுவலகக் குறிப்பு’’. அதில் துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அந்த அலுவலகக் குறிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குறிப்பிடுமாறு கூறியுள்ளார். 

24.10.2024 அன்று அனுப்பட்டிருக்கும் அலுவலகக் குறிப்பில் 06.12.2024 அன்று அதாவது 43 நாட்கள் கழித்து துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் குறிப்பு எழுதியுள்ளார். அவர் எழுதிய குறிப்பு என்னவெனில் இந்த புகார் சி.பி.கி.ராம்.ஸ் புகாருடன் இணைத்து விசாரிக்கப்படுகிறது என. 

5. 11.12.2024 அன்று அஞ்சல்துறை கண்காணிப்பாளரால் எனக்கு ஒரு கடிதம் அனுப்பப்படுகிறது. அதில் அக்டோபரில் அளித்த புகாருக்கான நிகழ்வு மீண்டும் நிகழ்ந்து நவம்பரில் சி.பி.கி.ராம்.ஸ் புகார் அளிக்கப்பட்டிருப்பதால் முதல் புகார் சி.பி.கி.ராம்.ஸ் புகாருடன் இணைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

6. அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவித்து நான் எழுதிய கடிதம்